எனது பக்கங்கள்

Wednesday 7 August 2013

முட்டாள்கள் தினம்!!


மனிதன் மனிதனுக்காக கொண்டாடும் தினம் 
தெரிந்தோ தெரியாமலோ 
மனிதன் உணர்ந்திருக்கிறான் 
மற்ற உயிரினங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் 
மனிதன் இன்றளவும் முட்டாளாகவே இருக்கிறான் என்பதை...


முட்டாள்கள் தினம் மிக அவசியமான தினமே!!!
ஜாதி வெறி கொண்ட முட்டாள்களுக்காக 
இன வெறி கொண்ட முட்டாள்களுக்காக 
நிற வெறி கொண்ட முட்டாள்களுக்காக 
இவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் முட்டாள்களுக்காக
முட்டாள்கள் தின நல்வாழ்த்துக்கள்!!!

Monday 5 August 2013

வெளிப்பாடு...




அவன் எனக்காய் மெனக்கெடும் அனைத்தும் 
எனக்கான அவனது அன்பின் வெளிப்பாடே!

எனக்காய் பல மைல் தூரங்களை 
கடந்து வரும்பொழுதும் ...

எனக்காக நெடு நேரம் 
யாருமற்ற தெருக்களில் 
காத்திருக்கும் பொழுதும்... 

எனது சோகமான தருணங்களில் 
அரவணைப்பாய் 
தோல் கொடுக்கும் பொழுதும்...

எனது கோபத்தை ஏற்றுக்கொண்டு 
அன்பை மட்டும் 
பரிசளிக்கும் பொழுதும்... 

எனது மகிழ்ச்சிகளை 
மேலும் பலமடங்காக ஆக்கும் 
வித்தைகளை உபயோகிக்கும் பொழுதும்...

அவனது கண்களில் 
நான் காண்பதுண்டு 
எனக்காய் அவன் கொண்ட 
நட்பின் வெளிப்பாடை... 

மனோ வியாதி!




யாருக்கு தான் இல்லை 
மனோ வியாதி ...

எனக்கும் உண்டு 
ஏன் உங்களுக்கும் உண்டு 

அந்த மரியாதைக்குரிய மனிதர்களை 
ஏளனம் செய்வதும் 
வெறுத்து ஒதுக்குவதும் ஏன்... 

ஒதுக்குவதனால் 
ஏளனம் செய்வதானால்
சுய அறிவோடு 
மனித குலத்துக்கு 
தவறுகள் பல இழைக்கும் 
சபிக்கப்பட்ட மனிதர்களே பொருத்தமானவர்கள் ...

மனோ வியாதி உள்ளவன் 
ஒரு உன்னதமான மனித பிறவி...
அவர்களிடத்தில் காணப்படும் 
நேர்மையும் அன்பும் 
இன்றைய வாழ்வில் காண கிடைக்காத 
ஓர் அற்புதமே... 

மனிதனை மனிதனை பாருங்கள் 
உங்களை விட உயர்ந்தவர்கள் 
இவர்கள் 
கடவுளின் பிள்ளைகள்!!!

அழகு!!!



அவள் சிறு குழந்தைகளை 
கொஞ்சும் பொழுதுகளில் 
அவளது கொஞ்சல் அழகே!!!

அவள் உடன்பிறந்தவர்களிடம் 
சண்டையிட்டு கோபிக்கும் பொழுதுகளில் 
அவளது கோபம் அழகே!!!

அவள் தோழிகளோடு 
அரட்டை அடித்து முகம் மலரும் பொழுதுகளில் 
அவளது மகிழ்ச்சி அழகே!!!

அவள் அவளுக்காய் பிறந்த 
மணாளனை பார்த்து நானும் பொழுதுகளில் 
அவளது வெட்கம் அழகே!!! 

யாதொரு தருணத்திலும் 
பெண்களும் பெண்மையும் 
அழகே!!! 

Monday 12 March 2012

மாறி வரும் மனநிலை...


ஒரு சில தினங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள பல நாட்களாக எண்ணி இன்று டான் அதற்க்கு நேரம் கிடைக்க இந்த பதிவை போடுகிறேன்...

நான் வழக்கம் போல எனது அலுவலக பணியை முடித்து விட்டு எனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அலுவலக கட்டிடத்தை விட்டு வெளியே வந்தேன். என்றைக்கும் விட அன்று வேலை பளு சிறிது அதிகமாக இருந்தது. அதை விடவும் ஏதோ ஒரு வித மன அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தது எனது மனது. என்ன செய்கிறோம் என்றே தெரியாதது போன்ற பிரம்மையில் உலவிக்கொண்டிருந்த தினம்  அன்று. அதே போன்ற மன உளைச்சலோடு எனது வண்டியை ஒட்டி செல்லும் பொழுது டான் உணர்ந்தேன் பெட்ரோல் மிக குறைவாக உள்ளது என. ஒரு வித எரிச்சல் உண்டானது. சரி இதை முன்னரே பார்த்திருக்க வேண்டும் நமது தப்பு தான் என்று நினைத்துக்கொண்டு பெட்ரோல் பங்க் சென்று நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு ஒரு வித நிம்மதியுடன் ஓட்டலானேன். அப்பொழுது ஒரு வளைவில் திடீரென ஒரு நடுத்தர வயது பெண்மணி குறுக்கிட்டு நிறுத்தினார். நானோ எங்கே அவர் மேல் ஏற்றி விடுவேனோ என்ற பயத்தில் வண்டியை பிரேக் போட்டு நிறுத்தினேன். கோவம் மண்டைக்கு சர்ர் என ஏறியது. அனால் நான் அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் அந்த பெண் எனது வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

"என்னமா? எதுக்கு நிறுத்தினீங்க?" என்று நான் அவரிடம் வினவினேன் கடுப்பை அடக்கிக்கொண்டு.

"என்னை பக்கத்தில் இருக்கும் பஸ் ஸ்டாப்ல எறக்கி விட்டுடுங்க ப்ளீஸ். நான் ரொம்ப நேரமா இங்க பஸ்க்காக வெயிட் பண்றேன் ஆனா ஒரு பஸ்சும் நிறுத்த மாட்டேன்றாங்க. இங்க வேற சினிமா தியேட்டர் இருக்கா எல்லாரும் ஆம்பிளைங்களா இருக்காங்க அதன் என்ன பண்றதுன்னு தெரியாம நின்னுகிட்டு இருக்கேன்" என்று அவர் படபடவென பேசினார்.

மனதிற்குள் கோபம் இருந்தாலும் அதை காட்டிகொள்ளாமல் நாம் எனது வண்டியை ஒட்டிக்கொண்டு சென்றேன். எனக்கு அவரை நம்புவத வேண்டாமா என்று பெரிய குழப்பம். யாருன்னே தெரியாத ஒருவரிடம் இப்படி வழிப்பறி பண்ணுவது போல வண்டி முன் வந்து விழுந்து நிறுத்திவிட்டு எதுவுமே சொல்லாமல் வண்டியில் ஏரியும் உட்கார்ந்து கொண்டாரே நான் ஏன் அவரை இறங்க சொல்லவில்லை. அவர் எது ம நகை திருடும் கும்பலோடு தொடர்புடையவராக இருந்தால் என்ன செய்வது. இல்லை இவங்களே என்னோட நகையை திருடினால்? எனது கழுத்தில் அணிந்திருந்த செயின் ஐ தொட்டுப்பார்த்துக்கொண்டேன். அப்பாடா இருக்கு... ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது. இருந்தாலும் எனக்கு ஏதோ மனதிற்குள் ஒரு வித பயம் ஓட்டிக்கொண்டே இருந்தது. நான் அவரிடம் எதுவுமே கேட்கவோ பேசவோ இல்லை. அந்த பெண்ணுக்கு ஏதோ தோன்றி இருக்க வேண்டும். அவரே மீண்டும் பேச ஆரம்பித்தார்.



"நான் மதுரைக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன். மதுரை பஸ் இந்த வழியா தான் போய் பஸ் ஸ்டாண்டுக்கு போகும்னு சொன்னாங்க. நானும் நம்பி ஏறிட்டேன். ஆனா ரோடு போடுறதால அது சுத்தி போய்டுச்சு. நாங்க இந்த ஊருக்கு வந்து ஒரு மாசம் தான் ஆகுது அதனால எனக்கு வழி தெரியல. நானும் கேட்டு கேட்டு பஸ் ஸ்டாப்க்கு வந்துடலாம்னு பாத்தேன் ஆனா எங்கயோ தப்பா வந்துட்டேன். இருட்டு வேறைய அதன் கொஞ்சம் பயம் ஆகிடுச்சு" என்றார். நானும் வெறும் ஒப்புக்கு தலை ஆட்டி வைத்தேன்.

ஒரு சில நிமிடங்களுக்கு பின்னர் அந்த பெண் அழுவதும் விசும்புவதுமாக எனக்கு கேட்டது. ஆனால் என்ன கேட்பது என்று தெரியவில்லை. ஏன் அழுகிறார்? ஏதேனும் வீட்டில் பிரச்சனையாக இருக்குமோ? ஒரு வேலை வீட்டை விட்டு சண்டை போட்டு கொண்டு ஓடி வந்துடாங்கலோ? இல்லை சினிமால காட்டுற மாதிரி புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்து புருஷன கொன்னுட்டு ஓடி வந்துருப்பாங்கலோ? இல்லை இல்லை ஏன் எனக்கு இப்படி எல்லாம் தப்பு தப்பா தோணுது. நானும் ஒரு சில சமையங்களில் ஆள் தெரியாத இடங்களில் மாட்டிக்கொண்டு பஸ்க்காக பல மணி நேரங்கள் காத்திருந்து இருக்கிறேன். அப்போது எல்லாம் குட எனக்கு மிக அழுகையாக வரும். கஷ்ட்டப்பட்டு அடக்கிக்கொண்டு என் விதியை நினைத்து நொந்து கொண்டு காத்திருந்திருக்கிறேன். ஆனால் நான் காத்திருக்கும் பேருந்து வந்ததும் என் மனம் தங்காமல் நான் கண்ணீர் விட்டும் இருக்கிறேன். அது போலவே ஒரு நிலையல் குட இந்த பெண்ணும் இருக்கலாம் இல்லையா பாவம் என்று பல வராக நினைத்துக்கொண்டே நான் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

எனக்கு ஏதோ மனது கொஞ்சம் மாறி அவரிடம் பரிதாபம் தோன்றியது. "உங்க வீடு எங்கக்கா இருக்கு?" என்றேன் முதல் முறையாக.

அவ்வளவுதான். வளவளவென்று பேச ஆரம்பித்து விட்டார். ஏன்டா கேட்டோம் என ஆகிவிட்டது. அவர் சொன்ன வீட்டின் முகவரி வரை எனக்கு மனதில் பதிவாகி விட்டது. எல்லாம் ஒரு முன்ஜாகிரத்தை தான். பின்னர் அவர் சொன்ன இடம் வந்ததும் நான் வண்டியை நிறுத்தி விட்டேன். ஆனால் அவர் இறங்கமலேயே இருந்தார். நானே அவரிடம் "நீங்க கேட்ட பஸ் ஸ்டாப் இது தான் இறங்கிகோங்க. இங்க தான் பஸ் நிக்கும். இங்க இருந்து ஐந்தாவது ஸ்டாப் உங்களோட ஸ்டாப் மறக்காம எறங்கிடுங்க" என்றேன். அவருக்கு புரிந்ததோ இல்லையோ எனக்கு தெரியவில்லை. தலை வெறுமனே ஆட்டிக்கொண்டார். பின் என்ன நினைத்தாரோ என்னவோ பொல பொலவென கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார். அருகில் இருந்த அனைவரும் என்னையே ஒரு மாதிரி பார்க்க எனக்கோ பயம் பற்றிக்கொண்டது.

"ஏன் அழுகறீங்க. அழாதீங்க" என நான் சொல்ல அவரோ

"ரொம்ப நன்றி மேடம். எனக்கு இந்த மாதிரி தனிய போய் பழக்கமே இல்ல. தனியா மாடிகுட்டதும் ரொம்ப பயம் ஆகிடுச்சு. என்கிட்டே போன் வேற இல்ல அதனால என் வீட்டுக்காரரை கூட கூப்பிட முடியல. ரெண்டு நாலா ஈ குழந்தைக்கு வேற ஒடம்பு சரி இல்ல. எனக்கு என்ன பண்ணுரதுன்னே தெரியல."

அய்யயோ பணம் கீது எதாவது வேணும்னு ஆடாய போட்டுடுவாங்களோ. விநாயகா என்ன சோதனை இது என மனதிற்குள் நினைத்தவாரே "பரவாலை விடுங்க. அதான் வந்துடீங்களே. இனி சீக்கிரமா போய்டுவீங்க. சரி நான் கிளம்பறேன்"

"மேடம் ஒரு நிமிஷம். உங்க பேரு என்ன?"

எதுக்கு பேரு கேக்குறாங்க? ஏதேனும் பிளாக்மையில் பண்ணுவாங்களோ. எதுக்கும் ஒரு பொய்யான பேரை சொல்லுவோம்.

"ஹ்ம்ம் வந்து என் பேரு வித்யா. உங்க பேரு என்ன?"

"என் பேரு சுபத்ரா. ரொம்ப ரொம்ப நன்றி. உங்களை என் வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டேன். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி." என்று சொல்லி மறுபடியும் அழ ஆரம்பித்தார்.

அய்யயோ இது என்னடா வம்பாப் போச்சு என்று நினைத்தவாரே "சரிங்க. பாத்து பத்திரமா போங்க. நான் வர்றேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

வழியில் எல்லாம் ஒரே சிந்தனை. என தான் பிரச்சனை அவங்களுக்கு. நாமளா எப்படி எல்லாம் பயபடுத்திட்டங்க. ஆ... திடீரென யோசனை வந்தவளாய் எனது கழுத்தை தொட்டுப்பார்த்தேன். அப்பாடா செயின் இருக்கு. பாவம் நல்லவங்க தான் போல என நினைத்தவாரே வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

பொதுவாக நான் யாராவது லிப்ட் கேட்டல் கொடுக்கும் வழக்கம் வைத்திருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களாக நடக்கும் பல வித அநியாயங்களுக்கு மத்தியில் பலரின் அட்வைஸ் காரணமாக எனது மனதிலும் ஒருவித பயம் தொற்றிகொண்டது.

ஒரு முறை நான் இதே போல் இரவு நேரத்தில் வண்டியில் வந்து கொண்டு இருக்கும் பொது ஒரு வயதானவர் என்னிடம் லிப்ட் கேட்கும் தொனியில் கையை நீட்டினார். ஆனால் எனக்கு பயம். அந்த ஏரியாவில் அவ்வளவாக மக்கள் நடமாட்டம் இருக்காது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால் என்ன செய்வது. நான் வேறு ஒரே பெண் என் வீட்டில். இன்னும் வாழ்க்கையில் பல நல்ல கேட்ட சம்பவங்களை பார்க்க வேண்டியவள். அல்ப்பாயுசில் சாக ஆசை இல்லாமல் வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டேன்.

ஆனால் ஒரு வாரத்திற்கு தூக்கம் வராமல் என்னை அலைக்கழித்தது அந்த வயோதிகரின் முகம். ஒரு வேலை அவர் நல்லவராக இருந்திருக்கலாம். ஏதேனும் அவசரமாக இருந்திருக்கலாம். அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்திருக்கலாம். அவருக்கும் அந்த இரவு நேரத்தில் தனியாக நடக்க உடலில் வலிமை இல்லாமல் தளர்வாக உணர்ந்திருக்கலாம். அல்லது அவரது மனைவிக்கோ வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதேனும் அவசரமாக தேவைப்பட்டு இவர் அதை வாங்க சென்று கொண்டிருக்கலாம். ஏன் அவரும் வழி தெரியாமல் கூட நம்மிடம் வழி கேட்டு இறக்கி விட சொல்லி கேட்க்க நினைத்திருக்கலாம். இன்னும் எத்தனையோ காரணங்கள் என் மனதில் வட்டமிட்டுகொண்டே இருந்தது. பின் ஒரு சில நாட்களுக்கு அந்த இடத்தை கடந்து செல்லும் பொது எல்லாம் சுட்ட்ரும் முத்தரும் பார்ப்பேன் அந்த முதியவர் எங்கேனும் தென்படுகிறாரா என்று. ஆனால் இன்று வரை என்னால் பார்க்க முடியவில்லை.



உலகத்தில் ஒரு சில மனிதர்கள் செய்யும் வழிப்பறி கொலை கொள்ளை போன்ற சம்பவங்களுக்காக இது போன்ற பல நல்ல உள்ளங்களையும் கூட நமது பார்வையில் சந்தேகமாக பார்க்கவே தூண்டுகிறது. இது போன்ற அவல நிலை நீடிக்கும் வரை பல நல்ல மனிதர்களும் கூட கெட்டவர்களாகவே சித்தரிக்கப்படுவார்கள். மனிதனின் மனநிலையும் கூட காலத்திற்கு ஏற்ப மனிதர்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே தானே வருகிறது.