எனது பக்கங்கள்

Wednesday 14 December 2011

நானும் ஒரு அம்பானி!!!

வணக்கம் தோழர்களே!!!


இந்த வருடத்தின் இறுதி நாட்களில் நாம இருக்கோம் (என்னமோ வாழ்க்கையோட இறுதி மாதிரி சொல்றாளே!) அதனால இந்த வருடம் நான் கத்துகிட்ட ஒரு சில விசயங்களை உங்களோட பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன். 
இந்த வரிசையில் முதல்ல வர்றது என்னோட கைவினைப்பொருள் கற்றுக்கொண்டது தான். (அடடா என்ன ஒரு சாதனை!) ஆமாங்க. இத்தனை நாளும் எனக்கு கைவினைபொருட்கள் செய்வதில் ஆசை இருந்தாலும் அதை கத்துக்கவோ இல்லை கத்துக்கிட்டதை தொடர்ந்து செய்து பார்க்கவோ நான் முயற்சி செய்ததே இல்லை (அதான் நீ ஒரு சோம்பேறின்னு உலகத்துக்கே தெரியுமே! என்னவோ ஒரு கலக்டர் ரேஞ்சுக்கு பிஸி பிஸினு பில்டப் வேற... அவ்வவ்வ்வ்வ்...


எதோ என்னோட நல்ல நேரம் ஒரு சில மாதங்களுக்கு முன்னாடி இணையதளத்தில் பல வகை கலைபோருட்கள் செய்வதை முடிந்தவரை படித்து கொண்டு என்னோட புது தொழில் (அடடா இது எப்போதில இருந்து??? அப்ப அம்பானி ஏலம் ஓரங்கட்ட வேண்டியது தான்!) தொடங்கி இருக்கேன். என் தங்கச்சி தான் இதுக்கு விளம்பரதாரர் (ஓஹோ... இதுக்கு விளம்பரதாரர் வேறயா... வெளங்கின மாதிரி தான்!) நான் செய்து கொடுக்கும் கிளிப், ஹேர் பேண்ட் எல்லாத்தும் அவ தான் எனக்கு வித்து குடுக்கறா. (அப்ப நீங்களும் ஒரு பிசினஸ் வுமன் ஆகிடீங்கன்னு சொல்லுங்க !) என்னோட படைப்புகளில் சில உங்கள் பார்வைக்காக... (செஞ்சதே இவ்ளோ தான் இதுல என்ன ஒரு பில்டப்!)...













அடுத்து நான் கிளாஸ் பெயிண்டிங் செஞ்சு காசுக்கு விக்க ஆரம்பிசுருக்கேங்க.(என்னது????? ) அதாவது இது எல்லாம் எனக்கு காலேஜ் படிக்கும் போதே கத்துகிட்டேன் ஆனா அதை தொடர்ந்து செய்யாம அப்படியே விட்டுட்டேன்.(இதுக்கு பேரு தான் பந்தா....) இப்ப தான் எனக்கு ஒரு விசேசத்துக்கு செஞ்சு குடுக்க வாய்ப்பு கெடைச்சுது. கெடைச்ச வாய்ப்ப விடக்கூடாது  இல்லையா (ஆமா ஆமா கெடைச்ச ஒரு இளிச்சவாய் கச்டமரும் போய்டகூடாது பாருங்க!) அதனால ஒரு பெரிய கிளாஸ் பெயிண்டிங் செஞ்சு குடுத்தேன்... எதோ நெறைய கிடைக்காட்டியும் ஓரளவுக்கு பணம் கெடைச்சது... (பணம் குடுத்ததே பெருசு இந்த லட்சணத்துல நக்கல் வேற!)... அந்த படமும் உங்கள் பார்வைக்காக... 








அப்புறம் என்னங்க... (நீங்க தான் சொல்லணும்!) எதோ நெறைய கத்துக்கலைன்னாலும் உருப்படியா வருமானம் பண்ற மாதிரி ஒரு சில விசயங்கள கத்து வெச்சுருக்கேனே... (ஆச்சர்யமான விஷயம் தான்!) இதை இந்த வருசத்தோட முழுக்கு போடாம தொடர்ந்து செஞ்சு நெறைய சம்பாதிச்சு நானும் அம்பானி மாதிரி ஆவேன்னு நெனைக்கறேன். (பாவம் பா அந்த அம்பானி எல்லாரும் அவர மாதிரியே ஆகனும்னா அவரு எங்க தான் போவாரு!) அதுக்கு தமிழ் படத்துல வர்ற மாதிரி ஒரு தீம் சாங் வேணுமே... ஹ்ம்ம்ம்... கண்டுபிடிச்சுட்டேன்... சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு..... சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு.... (அய்யயோ உன் அலம்பலுக்கு அளவே இல்லாம போய்டுச்சே... நான் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருக்கனுமே... நான் எஸ்கேப் ஆகிடுறேன்!!!


பி.கு. என்னோட மைண்டு வாய்ஸ் தாங்க அந்த பிராக்கேட்டுல இருக்கறது... 


Tuesday 13 December 2011

சூர்யகாந்தி ...


நான் பல நாட்களாக எனது வலைப்பூவை பல வேலைப் பழுவின் காரணமாக 
கண்டு கொள்ளாமல் இருந்து விட்டேன்... 

இன்று முதல் மறுபடியும் பதுவுகள் சேர்க்க தொடங்கி விட்டேன்... 

நானும் போடோக்ரபி கத்துகறேங்கோ... 
அதுக்கு தான் இன்னையில் இருந்து தினம் ஒரு பதிவு எனது படங்களுக்காக 
ஒதுக்க எண்ணி இந்த முதல் பதிவை பதித்துளேன்... விருப்பப் பட்டவங்க, 
பதிவும் படமும் பிடிச்சவங்க கொஞ்சம் சிரமம் பார்க்காம எதாவது கமெண்ட் 
குடுத்துட்டு போங்க நண்பர்களே !!!


பி.கு : பிடிக்காதவர்கள் கூட என்னது படங்களை நன்றாக எடுக்கும் சூட்சமங்களை எனக்கு சொல்லாம். திட்டுறதுன்னா மட்டும் கொஞ்சம் மெயில் அனுபிடுங்கபா...

பெண்மை


நாம் சேர்ந்து நடக்கும் பொழுது
உனது விரல்கள்
எனது கை விரல்களை தீண்டும்
அந்த நொடி பொழுதுகளில்... 
 
நாம் அருகில் அமர்ந்து பேசுகையில்
தோளோடு தோல் உரசும்
அந்த நொடி பொழுதுகளில்... 
நாம் ரகசியம் பேசுகையில்
உனது கன்னங்களோடு
எனது கன்னங்கள் தொட்டுக் கொள்ளும்
அந்த நொடி பொழுதுகளில்... 
என ...
இப்படியாக உனது ஒவ்வொரு
ஸ்பரிசங்களிலும்
எனது பெண்மை நித்தம் நித்தம்
புது புது வர்ணங்களோடு
பூ பூக்கின்றது... 
எனது மாற்றங்களை
உனது கணங்களும் மனதும்
அறிந்ததலோ என்னவோ
இன்னும் என் பெண்மை என்னிடமே
மிக பத்திரமாக
ஒளித்து வைக்கப்படிருக்கிறது...

மனிதரும் அவரவர் குணங்களும்...


இன்று என்னவோ தெரியவில்லை என் மனது ஒரு வித நிம்மதியின்மையோடு அலைந்து கொண்டு இருந்தது. அதற்க்கு பல காரணங்கள் என் மனது கற்பித்துக் கொண்டு இருந்தது என் மூளைக்கு. இருபினும் எதோ அசதியகவே உணர்ந்தேன். அப்பொழுது என் கைப் பேசி சிணுங்கியது. ஒரு வித சலிப்புடன் எடுத்துப் பார்த்தேன். அது எனது கல்லூரித் தோழி லக்ஷ்மி இடம் இருந்து வந்த ஒரு குறுந்தகவல். அதை பார்த்ததும் என் மனம் ஒரு வித புத்துணர்ச்சி அடைந்தது போல் உணர்ந்தேன். 

அதற்க்கு ஒரே ஒரு கரணம் தான் உண்டு. அவள் என் தோழி. மட்டற்ற தோழிகளைப் போல் அல்லாமல் இவளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இவளிடம் நான் பேசிப் பழகியது அதிகபட்சம் ஒரு வாரமாக தான் இருக்கும். நாங்கள் கல்லூரி படிப்பை முடிக்கப் போகும் கடைசி சில தினங்கள் மட்டுமே நாங்கள் பேசி இருக்கிறோம். பல முறை அவளை சந்தித்தும் பேசியும் இருக்கிறேன். அனால் அது ஒரு ஆழ்ந்த நட்பின் பரிபஷனைகள் அல்லாமல் இருந்தது. கரணம் இருவரும் வேறு வேறு நடப்பு வட்டதினுள் இருந்தோம். கடைசி சில நாட்கள் நாங்கள் ஒரு சேர அமர்ந்து இருந்த காரணத்தால் மட்டுமே நாங்கள் இபொழுது நல்ல தோழிகளாக உள்ளோம். சரி எங்களின் நட்பை பத்தி பேசுவதை நிறுத்தி விட்டு சோழ வந்ததை சொல்கிறேன். 

அவள் ஒரு வருடமாக ஒரு கிருஸ்துவ பையனை காதலித்து வந்தால். அவன் அவளின் பின்னல் பல நாட்கள் அளந்து திரிந்ததன் விளைவை இவளும் அவனது காதல் வலையில் சிக்கினால். பின் ஒரு வருட காதலின் பின்னால் ஒரு நல நாளில் இவள் தன்னை மனம் செய்து கொள்ளுமாறு பெற்றோர்கள் சொல்கிறார்கள் எனவே நே என்னை மணந்து கொள் விரைவில் என கூற ஆரம்பித்து இருக்கிறாள். ஒரு சில நாட்கள் மழுப்பிய பின்னர் இவளை பார்ப்பதும் பேசுவதும் நிறுத்தி விட்டிருந்தான். இதை உணர்ந்த லக்ஷ்மி அவனை பல வழிகளில் சந்திக்க முயன்றும் தோற்று போனால். 


பின் ஒரு சமயம் எதிர் பாரத விதமாக அவனும் அவனது வருங்கள கிறிஸ்துவ மனைவியையும் இவள் பஜாரில் காண நேர்ந்தது. அதன் பிறகு ஒரு நாள் அவனே இவளிடம் வந்து நாம் பிரிந்து விடலாம், என் பெற்றோர் நமது காதலுக்கு மதம் வேறு என்பதால் சம்மதிக்கவில்லை, எனக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் நிச்சயம் முடித்து விட்டார்கள் என பலவாறாக பல கதைகளை இவளிடம் ஒப்பிதுள்ளான். அவனது துரோகத்தை உறுதி செய்தவள் பதில் ஏதும் சொல்லாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து வந்துவிட்டால். 

இடத்தை விட்டு நகர்ந்தாளே தவிர அவனையும் அவனது துரோகதும் அவளது மனம் மறக்வில்லை. அவளை மிகவும் சித்திரவதை செய்தது. தற்கொலைக்கு முன்றவலை அவளது பெற்றோர் காப்பாற்றினர். அந்த சமயத்தில் தன் அவளது நட்பு எனக்கு கிடைத்தது. அவளது கவலைகள் அனைத்தும் கேட்ட்கும் வடிகாலாகவும் அவளின் துயரங்களை துடைத்து அவளை மீண்டும் மகிழ்ச்சியான நிலைக்கு மாற்றவும் நான் பல தகிடுதத்தம் செய்ய வேண்டியதாகி விட்டது. அனால் ஒரு வழியாக அவள் சிறிது சகஜ நிலைக்கு வந்திருந்தால். 


அனால் அவளது பெட்ட்ரோருக்கு அவள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டிருந்தது. அவளுக்கு திருமணம் முடிக்க எண்ணி பல வழிகளை கையாண்டனர். இவள் படிப்பு முடிந்து ஏதேனும் வேலைக்கு போக வேண்டும் என சொனதர்க்கு அவர்களின் பயம் காரணமாக ஜாஸ்தகம் சரியில்லை வேலைக்கு சென்றால் தந்தையின் உயிருக்கே ஆபத்து என பல பொய்களை சொலி அவளை வீட்டினுள்ளேயே அடைத்தனர். அவளுக்கு காரணங்கள் தெரிந்திருப்பினும் பெட்ட்றோரின் நிமதிக்காக வீட்டினுள்ளேயே இருந்தால். 

அவளது பெற்றோர் அத்துடன் நில்லாது அவளுக்கு மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்தனர். இவள் பல முறை சொலிம் அழுதும் கெஞ்சியும் அவர்கள் இவளது சொற்களை மதிக்கவே இல்லை. இவளை பல வராக மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டனர். இதை கேள்விப்பட்ட என்னக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் அவளது நிலை கண்டு பரிதாபமாகவும் இருந்தது. அனால் நான் என்ன செய்ய முடியும். பெற்றோர்களிடம் பேசும் துணிவு அவரவர் பிள்ளைகளுக்கே இல்லை எனில் மற்றவர்களுக்கு எப்படி வரும். அப்படியே வந்து நான் பேசினாலும் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா. ஒரு வேலை நான் செய்தது தவறாகி விட்டால் நான் எப்படி அவர்களை எதிர்கொள்வேன் என்ற பல எண்ணங்கள் என் மனதில் எழுந்தது.  எனக்கு அத்தகைய எண்ணத்துடனேயே நான் இருந்ததால் அவளது பெற்றோரிடம் சென்று வாதிட மனமில்லாது மௌனமாக இருந்து விட்டேன். 

கடந்த மதம் 20 ஆம் தேதியில் அவளது திருமணம் நடந்தது. என்னால் அவளது திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் ஒரு சில காரணங்களால் தவிர்க்க வேண்டியதை போய் விட்டது. இருப்பினும் என் மனம் முழுவதும் நாடற்று வரை அவளது திருமணத்தை பார்க்கவில்லையே என்ற வருத்தம் குடிகொண்டிருந்தது. அவளது திருமனதிர்க்குப் பின் இன்று தான் அவளது குறுந்தகவல் வருகிறது. அதனால் தான் என் மனது கூதூகளிக்கிறது.


நான் அவளுக்கு அழைத்துப் பேச எண்ணி அவளது எண்களை  அழுத்துனேன். அவள் கைப்பேசியில் பேசினால். 

"ஹலோ லக்ஷ்மி! எப்படி இருக்க மா?" 

"நான் நல்ல இருக்கேன்  மா. நீ எப்படி இருக்க?" 

"என்னக்கென நான் நல்லாத்தான் இருக்கேன் டா. ஆச்சுவல்லி நான் உங்கிட்ட சாரி கேக்கணும் மா. நான் உன் கல்யாணத்துக்கு வரமுடியல்ல மா சாரி டா"

"ஹ்ம்ம் பரவாஇல்லை டா. என் வாழ்க்கையே நரகமா ஆகிடுச்சு அதுல்ல போய் நீங்க வரலைன்னு நான் கோவிச்சுக்க ஏலம் முடியாது மா"

"ஹேய் என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி விரக்தியா பேசற மா? எதாவது ப்ரோப்லம் ஆ?"

"(அவள் விசும்புவதை என்னால் உணர முடிந்தது)... ஆமாம் டா. அவங்க எங்களை ஏமாத்திட்டாங்க டா."

"ஏ... என்னது... ஏமாத்திட்டாங்களா? எப்படி மா?"

"அவருக்கு தலை வழுக்கை மா. ஆனா அதை எங்க கிட்ட சொலவே இல்ல டா. கல்யாணத்துக்கு அப்புறம் நாலு நாள் கழிச்சு தான் சொன்னாரு மா. எனக்கு ஹார்ட் பீட் நினுடது போல ஆச்சு டா. எல்லாரும் இனி எவ்ளோ அசிங்கம பேசுவாங்க மா. கல்யாணத்துக்கு முன்னாடியே ஏன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் ல.. ப்ச்.."



"ஹ்ம்ம்... அவரு பண்ணினது தப்பு தான் டா. ஆனா அதுக்கு போய் வாழ்க்கை நரகம் அப்படினு எல்லாம் பேசாத மா. உனக்கு கல்யாணம் ஆகி 13 நாள் தான் ஆகுது அதுக்குள்ள இப்படி மனசு நொந்து பேசறது தப்பு டா. கஷ்டமாக தான் இருக்கும் கண்டிப்பா ஆனா நீ தான் இத எல்லாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் மா. வழுக்கை விழறது இப்ப எல்லாம் ரொம்ப சகஜம் டா. அவருக்கு கொஞ்சம் அசிங்கம இருந்துருக்கும் அதன் மறைத்து விட்டார் போல. நீ கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு மா உனக்கே புரியும்"

"இல்லமா. நீ நெனைக்கற மாதிரி எல்லாம் இல்ல. ஏ மாமியார் என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாங்க மா. ஒரு வேலை குட செய்ய மாட்றாங்க. எலா வேலையும் நானே செய்ய வேண்டி இருக்கு. நைட் தூங்கவே மணி 12 ஆகிடுது. கொஞ்சம் லேட் ஆ எழுந்துடாலும் திட்ட ஆரம்பிச்சுடுறாங்க. இவரு எதுமே கண்டுக்க மாட்டேன்றாரு. நான் எங்க வீட்ல எவ்ளோ ப்ரீ ஆ இருப்பேன் தெரியுமா. ஆனா இப்போ எதோ வேலைக்காரி மாதிரி என்ன டிரீட் பண்ணறாங்க டா. எனக்கு இந்த 13 டேஸ் அங்க இருந்ததே எனக்கு எதோ 13 இயர்ஸ் இருந்த மாதிரி இருக்கு மா. எனக்கு இந்த மாதிரி மாடு மாதிரி வேலை செயுறது எல்லாம் ரொம்ப புதுசு மா. மனசும் ஒடம்பும் ரொம்ப டயர்ட் ஆகிடுச்சு டா. எதோ வாழ்க்கையே வெறுமைய இருக்க மாதிரி அடுப்பங்கரை மட்டும் தான் உலகமேன்னு இருக்க மாதிரி இருக்கு டா."

"ஹ்ம்ம்... மாமியார் நா கொஞ்ச நாள் அப்படி தான் இருப்பாங்க டா. அவங்க கிட்ட கொஞ்சம் அன்பா நடந்துக்க மா. அவங்க ஏதாது பேசின நீ அத மனசுல வெச்சுக்காத டா. அவங்களும் நமக்கு அம்மா மாதிரி தான அப்படின்னு நெனைச்சு பாரு மா உனக்கு எந்த கவலையும் இருக்காது."

"லூசு மாதிரி பேசாத டா. நானும் கல்யாணத்துக்கு முன்னாடி உன்ன மாதிரி தான் டயலாக் பேசினேன் அனா இப்ப தான தெரிது அத எல்லாம் நம்மளால செய்யவே முடியாது பா. எவ்ளோ கஷ்டம் தெர்யுமா. என்ன எல்லாரும் சேர்ந்து ஒரு நரகத்துல தள்ளிட்டாங்க. எல்லாம் என் தல எழுத்து சே...."

"........................................."

"என்னடா உனக்கே தலை சுத்துதா என் பிரச்சனை எல்லாம் கேட்டு?"

"இல்லமா சும்மா யோசிச்சு பார்த்தேன். சரி அத விடு சாபிடச்சா?"

"ஹ்ம்ம் சாப்பிட்டேன் மா. சரி எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்கிட்டு சாயங்காலம் 7 மணிக்கு கெளம்பனும். நான் வெச்சுடவா?"

"ஹ்ம்ம் சரி மா. ஒடம்ப பத்துக்கோ. டேக் கேர்."



இந்த சம்பவத்தில் இருந்து என்ன எனக்கு தெரயுதுன்னா... ஒரு பழமொழி சொல்லுவாங்க என் அம்மா "ஆகாத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்" அப்படின்னு. அந்த கதைய தான் இருக்கு இங்கயும். அவளுக்கு பிடிக்காத கல்யாணத்தால அவளுக்கு அங்க இருக்க யாரு எது சொன்னாலும் பிடிகல. அதுவும் இல்லாம புது எடம் புது மனிதர்கள் என்று அனைத்தும் மாறும் பொழுது பெண்களுக்கு ஒரு வித மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு தான். என் தோழிக்கும் அதே தான் என்று நான் என் அறிவிற்கு எட்டும் வரை சிந்தித்து பார்க்கையில் தெரியுது. அதையும் தாண்டி பெற்றவர்கள் செய்யும் மிகப் பெரிய தப்பு பிள்ளைகளுக்கு சமைக்க, வீடு வெள்ளை செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். அதோடு அவசரப் படாமல் நிதானமாக அவர்களது மனதிற்கு ஏட்டற படி திருமணம் நடந்தால் மட்டுமே வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்கும். 

அட! மாப்பிள்ளை விஷயத்தை விட்டு விட்டேனே. எனக்கு என சொல்றதுனே தெரியலைங்க. வழுக்கை தலையா இருந்த என்னங்க. வாழ்க்கைக்கு தேவை உண்மை தான். அதுவே இல்லன்னா எப்படிங்க அவங்களோட நாம வாழ்க்கை முழுவதையும் பகிர்ந்து கொள்வது. வழுக்கை என்பது எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை ஆனால் அதை முன்கூட்டியே பெண் வீட்டாரிடம் சொல்வது நல்லது தானே. அது உங்களுக்கும் உங்கள் சுய மரியாதைக்கும் நேர்மைக்கும் ஒரு எடுத்துக்கட்டாக இருக்கும் அல்லவா. இனியும் இது போன்ற போலி வேதங்கள் போடுவதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் இன்னும் அடுப்பூதும் பெண்களாக மட்டுமே இருப்பதில்லை என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் கனவான்களே ! 


என் மனம் மீண்டும் பாரமாக உள்ளதை இப்பொழுது உணர்கிறேன் !

மக்களே என் கருத்திற்கு மாறுபட்ட கருத்துக்கள் உங்கள் மனதில் பட்டால் தயங்காமல் பின்னூட்டம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

என்னவன் கவிதைகள்...



பெண்ணே !!!
உன் தேகம் தொட்டதால்
நீர் குமிழி கூட
சொர்க்கம் செல்கிறது !!!
------------------------------------------------------------
என்னவளே !
என் இதயமும் வங்கி ஆகிவிட்டது
உன் நினைவுகளை முதலீடு செய்வதனால்...

------------------------------------------------------------



என்ன ஆச்சரியம்!
என் மனதில் பல நூறு பூக்கள் ஒன்று சேர
பூத்துக் குலுங்கியது போன்ற உணர்வு
என்னவளின் முகத்தில்
புன்னகை பூக்கும் பொழுதில்...

தோழமை


நான் இந்த அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து நான்கு மாதங்களாகப் போகின்றது இன்றுடன். நாட்கள் நொடிகளை போல் மிக வேகமாக கடந்து செல்வதை நினைத்தாள் பிரமிப்பாக உள்ளது. இப்பொழுது தான் மேலாண்மைப் படிப்பை முடித்து பல பிரச்சனைகளுக்கு பிறகு என் வீடு வந்து சேர்ந்தது போல் உள்ளது. ஆனால் இன்றுடன் நான் என் படிப்பை முடித்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. 
என் தோழி ஒருத்தியின் மூலமாக தான் இந்த அலுவலகத்திற்கு வந்தேன். அவள் என் பள்ளியிலும் கல்லூரியிலும் நெருங்கிய தோழியாக இருந்தவள். அவளிடம் ஒரு வகையான வசீகரம் என்றுமே நிறைந்திருக்கும். அவளை நான் பல முறை ரசித்ததுண்டு. நான் மட்டும் அல்ல பலரும் அவளை ரசித்துள்ளனர். அவள் நல்ல மஞ்சள் நிறம். உயரம். சட்ட்ரே பருமனான தேகம். வடிவான முக லட்சணம். இதை எல்லாம் மீறி பலரிடம் இல்லாத நான் பார்க்காத மரியாதையை கலந்த நட்பு அவளிடம் உருவாகியது. அவள் அஹங்காரம் பிடித்தவள் அல்ல. ஆனால் பார்பவர்களுக்கு அவளின் தோற்றம் அப்படி ஒரு உணர்வை தரும். நானும் அப்படி தான் நினைத்தேன் அவளிடம் பழகும் முன்னர். 


அப்பொழுது எல்லாம் என் வீட்டில் சிறிது ஏழ்மை. அதுவும் இல்லாமல் நான் சட்ட்று குள்ளமாகவும் குண்டாகவும் கண் கண்ணாடி அணிந்தும் இருப்பேன். அதன் காரணமாக நான் யாரிடமும் அதிகம் பேசாமல் ஒரு வித தாழ்வு மனப்பான்மையுடன் உலா வருவேன். என்னை யாருக்கும் பிடிக்காது என்று நினைத்து என்னை நானே கூடத்தில் இருந்து தனிமைபடுத்திக் கொள்வேன். ஆனால் நான் அது போல் இருப்பது தவறு என்று உணர்ந்து என்னை நானே செதுக்கி கொண்டு இருந்த நாட்களில் தான் அவளது தோழமை என் வேறு ஒரு நெருங்கிய தோழியின் மூலமாக கிடைத்தது. 

இவளைப் பார்க்கும் பொது எல்லாம் எனக்கும் அவளைப் போல் வள வேண்டும் போல் தோன்றும். அவளை சுற்றி எபோழுதும் ஒரு கூடம் இருந்து கொண்டே இருக்கும். அதில் நானும் ஒருத்தியாக ஐக்கியமானேன். ஆனால் அவள் அனைவரிடமும் சமமாக தான் பழகுவாள். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நடப்பு அவளிடம் இருந்தது. அவளை பார்த்து தான் நானும் எப்படி பழகுவது என்று கற்று கொண்டேன். 


அவள் நட்பை மதிப்பவள். ஆனால் நட்பை ஒரு வித எல்லை கொடு போட்டு அதனுள் மட்டுமே சுவசிப்பவள். ஏதேனும் படிப்பில் உதவி என்றல் தயங்காமல் செய்வாள். ஆனால் அதுவே பணம் என்று வந்தால் ஒரு துளி கூட இசைந்து கொடுக்க மாட்டாள். அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்னில் நான் மிகவும் தாராள பிரபு. என் தாய் எனக்கு கொடுக்கும் ஒரு சில பொன்னான சில்லறைகளையும் என் பணக்கார தோழிகள் கேட்டால் கொடுத்து விட்டு பின் வருத்தப் படுவேன். ஆனால் இவள் அப்படி அல்ல. கருமி என்று சொல்லும் அளவு இல்லை என்றாலும் இவள் பண விசயத்தில் கறார் தான். 

நானும் பள்ளியில் இவளுடன் படித்து பின் கல்லூரியிலும் ஒன்றாகவே சேர்ந்தோம். ஆனால் கல்லூரியில் எனக்கென்று ஒரு விசிறி வட்டம் உருவாகும் அளவு நான் என் நடை உடை பேச்சு அனைத்திலும் தேறிவிட்டேன். என் தோழிகள் என்னை பற்றி கூறும் பொழுதுகளில் மிகவும் பெருமையாக இருக்கும். எதோ உலக மகா சாதனை புரிந்து விட்ட மிதப்பு என்னிடம். நானும் பண விசயத்தில் மிக கவனமாகவும் பொறுப்பாகவும் இருந்தேன். எனது கல்லூரி நாட்கள் மிகவும் வசந்தமானது ஏனென்னில் அது மகளிர் கல்லூரி. மகளிர் மட்டும் இருப்பது எத்துனை மகிழ்ச்சி தெரியுமா. அது ஒரு கனாக்காலம் என்பது தான் இன்றைய நிலை.

இளமையின் கடைசி கட்டத்தில் இருக்கும் என் வயது போன்ற பெண்களுக்கு பல வித கவலைகளும் வருதங்களுமே எஞ்சுகின்றன. நாங்களும் அது போலவே தான் உள்ளோம். இன்று நாங்கள் இருவரும் இரண்டு வருட இடைவெளிக்கு பினர் ஒரே அலுவலகத்தில் வேலை புரிகிறோம். ஆனால் முன் இருந்த சிநேகம் தொலமிய இன்று இல்லை. கரணம் பல. ஆனால் ஒருவர் மீது வைத்துள்ள அன்பு என் குறைகிறது. அன்பு பாசம் காதல் இவை அனைத்தும் ஒரு முறை ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் மாறாது மறையாது என்று பலர் பல விதமாக சொல்வதுண்டு. அவை உண்மை என்றே நானும் நினைத்திருந்தேன். ஆனால் உலகின் நியதி அதுவல்ல. அனைவரும் தத்தம் வாழ்க்கை படகில் ஏறி பயணிப்பதே மிக அவசியம் என்று ஆகி விட்டது இந்த அவசர உலகில். இதில் எங்கே பொய் பள்ளித் தொலயொடு பேசுவது கல்லூரித் தோழியோடு அரட்டை அடிப்பது. ஏதேனும் கல்யாணம் வளைகாப்பு என்று தோழிகள் அழைத்தாள் கூட போக முடியாத அளவிற்கு அவரவர் வாழ்க்கை முக்கியமாகி விட்டது. 

என் தோழிகள் பலருக்கும் ஒருவர் பின் ஒருவராக திடுமணம் நடந்து கொண்டே வருகிறது. எஞ்சி உள்ளது ஒரு சிலர் மட்டுமே. ஆனால் நாங்கள் மனம் ஆகவில்லை என்றாலும் ஒரு வித பந்தத்தினுள் அகப்பட்டு கொண்டிருப்பதே எண்களின் தொடர்புகள் முன்பு போல் இல்லாததற்கு ஒரு மிக பெரிய காரணம் என நான் கருதுகிறேன். பெண்களின் நட்பு ரயில் சிநேகம் போல தான் என்று என் தாய் அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் நான் அதை ஏற்றுக் கொல்லாமல் பல முறை வாதாடி இருக்கிறேன். இப்பொழுது எங்கள் நிலையை நினைக்கயில் என் தாய் சொனது நினைவுக்கு வந்து செல்கிறது. 


ஒரு பெண்ணின் வாழ்வில் ஒரு ஆண் நுழைந்து விட்டாலே அவளது சுதந்திரம் பறிபோய் விடுகிறது என்றே என் எண்ணம். அது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது என்பதை என் தோழிகள் பலரது கணவன்மார்களை பார்த்தே புரிந்து கொண்டேன். என்ன தான் இருந்தாலும் பெண்களால் இன்றளவும் ஆண்களை போல் சுதந்திரமாய் பறக்க முடிவதில்லை. சாவின் விளிம்பில் இருக்கும் வரை கூட ஆண்கள் பலர் நெருங்கிய நண்பர்களாகவே இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் பெண்களோ அப்படி இருப்பவர்கள் மிக மிக குறைவு. நூற்றாண்டுகள் பல மாறினாலும் பெண்கள் பெண்களாகவே தான் இருக்கின்றனர் இன்றளவும். 

ஏதேனும் கடைத் தெரு போகும் பொது, குடும்பத்தோடு சுற்றுலா போகும் போதோ, விசேச வீடுகளுக்கு போகும் போதோ தான் பெண்களின் அநேக தோழமை காணப் படும். அதும் ஒரு சில நிமிடங்களே தாக்குப் பிடிக்கும். இது போன்ற சில சமயங்களில் தான் நம் சுதந்திரம் பற்றிய எண்ணமே பலருக்கு வருகிறது. பின் அன்று இரவு துக்கம் வரும் வரை தான் தோழி பற்றிய ஒரு சில சிந்தனைகளோடு முடிந்து போகிறது. நானும் அது போன்று என்றும் நடந்து விட கூடாது என்று மனதில் பல முறை நினைத்துள்ளேன். இன்றும் நினைக்கிறேன். தோழமையின் பேரின்பத்தை பருக துடிக்கும் வண்டு போல் இன்றைய இரவு என் கனவில் தோழிகளுடன் கரைக்க மனது திட்டமிட தொடங்கி விட்டது!!! 

தவிப்பு...


என் மனதின் விபரீத விளையாட்டுக்களை
சிறிதும் சட்டை செய்யாதது போன்ற
வர்ணனையுடன்
சலனமற்று தென்பட்டது
என் முகம் இன்று!

உன் அருகில் உள்ள
தருணங்களை மட்டும் ருசித்த படி
ருசிகண்ட பூனையாய்
உந்தன் அருகமையில் லயித்திருந்தேன் !


உன் கண்களை  உற்று நோக்கும்
திராணியற்ற
நோயாளியை போன்று உணர்கிறேன்
மனதில் உனக்கான காதலும்
அருகாமையில் உந்தன் நட்புமாய்
தொடர்கிறது எனக்கும் உனக்குமான பயணம்
என்றும் போல்... இன்றும்...

கள்வனே !


என்னடா வைத்திருக்கிறாய் 
உந்தன் கண்களில் 
காந்த ஈர்ப்பு சக்தியா?
மனதை ஈர்க்கும் யுக்தியா?


என் உடலிலிருந்து உயிரை மட்டும் 
எவ்வித கத்தியுமின்றி 
இரத்தம் சிதறாமல் 
உனதாக்கிக் கொண்டாயே 
கள்வனே !

கண்கள்...


நீ தான் நான் சிறு வயதில் படித்து லயித்த 
காவிய தலைவன் நளனா?
பேரழகி தமயந்தியை 
அவனது ஒற்றை கண் பார்வையால் 
தன் வசமாக்கிய ஆண்மகனா?



ஆம்! நீ அவனாக தான் இருக்ககூடும்
நானும் உன் வசம் ஆனேனே 
உனது ஒற்றை விழிப் பார்வையால்!!! 

ஏக்கம் !!!


தந்தை முகம் பார்த்ததில்லை 
கதைகள் பேசி மகிழ்ந்ததில்லை 
நடை பயின்று கால்கள் வலித்ததில்லை 
தோல் சாய்ந்து அழுததில்லை ...

இவை அனைத்திற்கும் 
ஏங்கிய வருடங்கள் 
இருபத்தி இரண்டு ஓடிவிட்டன...


இன்று நான் பார்க்கிறேன் 
பேசி மகிழ்கிறேன் 
கால்கள் வலியில் தேய்கின்றன 
அழுவதற்கு ஆதரவை ஒரு தோல் உள்ளது...

ஆம்... உணதுரவால் உயிர் பெறுகிறது 
நான் ஏங்கித் தவித்த 
கிடைக்கப் பெறாத 
என் தந்தை உடனான 
நாட்களும் ஆசைகளும்... 

தேவாலயம்...


ஒரு சில வருடங்களுக்கு முன் நான் திருச்சி கோவில்களுக்கு சென்றிருந்த பொழுது இப்படத்தை எடுத்தேன். நான் எடுத்த பல படங்கள் காணமல் போன நிலையில் இப்படம் மட்டும் எனது கணினியில் இருந்தது. இதை பாத்ததும் எனக்கு ரொம்ப சந்தோசம் ஆகிடுச்சு. உங்க கூட  பகிர்ந்துக்கணும்னு ஆசைப் பட்டு போடுகிறேன்.


பார்த்துட்டு இந்த படத்தையும் தேவாலயத்தையும் பத்தி என்ன நினைக்கறீங்கன்னு பின்னூட்டம் குடுங்க :) :)

ஓணம்


எனது வீட்டின் அருகில் ஒரு கேரளா தம்பதியினர் வாழ்கின்றனர். சமீபத்தில் ஓணம் பண்டிகையின் போது அவர்கள் பையனுக்கு இப்படி உடை அணிந்து எங்கள் வீட்டிற்க்கு பாயசம் கொடுத்து அனுப்பினர். அவனை பார்த்ததும் எனக்கு படம் பிடிக்கணும்னு தோணிடுச்சு. ஆனா பாருங்க பயபுள்ள சிரிக்கவே மாட்டேனுட்டான். நானும் ஒரு கால் மணி நேரம் போராடிப் பார்த்துட்டு விட்டேன் :( அவன் சிரிகலன்னா என்ன அவன் படம் நல தனே இருக்குனு இங்க போடறேன் :)


கெட் அப் எப்படி இருக்கு??? அழகா இருக்குல... ;) ;)

ஆஹா எத்தனை அழகு !!!



மக்களே... இதை பாத்தீங்களா?
இது ஒரு நாள் நான் என்னோட அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது வானம் இப்படி கலர் கலரா இருக்கே அதும் நம்ம ஊருலன்னு பார்த்து அசந்து போய் எடுத்த படம்.
இந்த படம் எடுக்க நான் என்னோட ஆபீஸ் மொட்டை மாடிக்கு போய் ஒரு சில ஸ்டண்டு வேலை எல்லாம் செஞ்சு எடுத்த படம். நல்லா இருக்குல்ல :) :)
எனக்கு ரொம்ப புடிச்சுதுங்க அதான் உங்க கிட்டயும் பகிர்ந்துக்கலாமே அப்படின்னு முடிவு பண்ணி இந்த பதிவை போடுறேன்.
மறக்காம படத்த பாத்துட்டு பின்னூட்டம் குடுங்க நண்பர்களே!!!

மலர் நாள்


ஒரு சில தினங்களுக்கு முன்னால் எனது பக்கத்து வீட்டில் உள்ள சிறுவனுக்கு பள்ளியில் மலர் நாள் கொண்டாடப்பட்டது.
அவனது பள்ளியில் வாரம் ஒரு நாள் ஒரு பொருளை வைத்து அதன் பயன்பாடுகளுக்கும் அந்த பொருளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இது போன்று பல நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்றும் அதே போல் மலர் நாள் கொண்டாட நானும் அவனது தாயும் சேர்ந்து அவனை அலங்கரித்தோம்.
அந்த அலங்காரத்தோடு அவன் எனது கேமராவிற்கு போஸ் கொடுக்கிறான் பாருங்க...
ரொம்ப அழகா இருக்கான்ல...

தொடக்கம்


அன்று புதன் கிழமை. என்றைக்கும் இல்லாத அதிசயமாய் சுவேதா 
விடியற்காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து விட்டாள். படுக்கையை மடித்து 
வைத்து விட்டு பல் துலக்க வாசற்ப்படி அருகில் வந்து நின்றால். எதோ 
காலை வெயில் "சுள்" என சுட்டெரித்தது போல் உணர்ந்தால். "இவ்வளவு 
சீக்கிரமே எழுந்தும் சூரியன் இப்படி கொளுத்துகிறதே" என மனதில் 
நினைத்தவாரே பல் துலக்க ஆரம்பித்தால். 

அது பங்குனி மாதம் என்பதால் சூரியன் மிக வேகமாக உதித்து விடும் 
என்பதை கூட உணர முடியாத அளவிற்கு அவள் இந்த 2 மாதங்களாக 
காலை 8  மணி வரை தூங்க கற்றுகொண்டிருந்தால். பத்தாம் வகுப்பு 
தேர்வு எழுதி விட்டு விடுமுறையை மிக மகிழ்ச்சியாக 
கழித்துக்கொண்டிருக்கும் பெண் சுவேதா. இன்று தான் பத்தாம் வகுப்புத் 
தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 
அதற்க்கு தான் இந்த விடியற்காலையில் எழுந்திருந்தால்.

இரவெல்லாம் தான் பாஸ் ஆகிவிடுவோமா? என்ன மதிப்பெண் வரும்? ஒரு 
வேலை பெயில் ஆகிவிட்டால்? அய்யயோ அம்மா கொன்னுடுவங்களே... 
என பல கேள்விகளும் பதில்களுமை பலவாறு தோன்றி சுவேதாவின் 
தூக்கத்தை முழுதாய் கெடுத்து விட்டிருந்தது. அதனால் தான் இருப்பு 
கொள்ளாமல் அதிகாலயிலயே எழுந்து விட்டாள். 

"என்ன சுவேதா? அதிசயமா இருக்கே. இன்னிக்கு மழை அடிச்சு ஊத்த 
போகுது போ. நீ இவ்வளவு சீக்கிரமாகவே எழுந்துருக்கியே. என்ன ரிசல்ட்ட
நெனைச்சு தூக்கம் வரலையா? எப்படியும் நீ ஸ்டேட் ரான்க் ஒன்னும் 
வாங்கப் போறது இல்ல அப்புறம் என்ன நிமதிய தூங்க வேண்டியது தானே?
" பக்கத்து வீட்டு ரேவதி அக்க நக்கலாக பேச சுவாதிக்கு பற்றிக்கொண்டு 
வந்தது. அமைதியாய் இருந்து விட்டாள். அவளால் வேறென்ன செய்ய 
முடியும்! 

தன்னால் மற்றவர்களை போல் நன்றாக படிக்க முடிய வில்லையே என்ற 
ஏக்கம் அவளுக்குலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பட புத்தகத்தை 
எடுத்தாலே எட்டிக்காய் போல் கசந்தது. அவளும் எதோ முடிந்தவரை தன் 
தாயின் ஆசைக்ககப் படித்து பரிட்சையும் எழுதி விட்டாள். இன்று தெரிந்து 
விடும் அவளது மதிப்பெண் என்னவென்று. மனதும் உடலும் லேசாக 
நடுங்கத் தொடங்கியது. தொண்டைக் குழியில் எதோ ஒன்று சிக்கிக்கொள்ள 
கண்களை முட்டிக்கொண்டு கண்ணீர் எட்டிப் பார்த்தது. சட்டென்று 
சுதாரித்துக் கொண்டு வாயை கொப்பளித்து விட்டு வீட்டினுள் வந்தால்.
அது ஒரு சிறிய அறை. 
பத்துக்குப் பதினாறு எண்ணக் கட்டப்பட்ட ஒட்டறை அறை. அங்கே தான் 
சுவேதாவும் அவள் தாய் மல்லிகாவும் குடியிருந்தனர். சுவேதா பிறப்பதற்கு 
ஒரு சில மாதங்கள் முன்னதாகவே அவளது தந்தை ஒரு விபத்தில் 
உயிரிழந்து விட்டார். அதன் பிறகு சுவேதவை பெற்று வளர்த்த அவள் தாய் 
பட்ட கஷ்டத்திற்கு அளவேயில்லை. 

மல்லிகா மிகவும் வைராக்கியமும் நம்பிக்கையும் உள்ளவர். தன் 
பெண்ணை எப்படியாவது ஆங்கில பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துவிட 
வேண்டும் என்ற ஆசையில் பாதிக் கிணறு தாண்டியாயிற்று. அந்த 
ஊரிலேயே பிரபலமான ஆங்கில பள்ளியில் தன் பெண் படித்து பத்தாம் 
வகுப்புத் தேர்வும் எழுதிவிட்டாள். வெளிப்புறம் பார்க்க இயல்பாக 
இருந்தாலும் இன்று அந்த தாயின் மனமும் தன் மகளின் மதிப்பெண் 
பற்றிய கவலைகள் தேங்கிக் கிடந்ததை அவரது கண்கள் காட்டிக் 
கொடுத்தது. 

பல் துலக்கிவிட்டு வந்த சுவேதா மீண்டும் கட்டிலில் சாய்ந்தால். மல்லிக 
காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார். ஏதேதோ எண்ணங்கள் 
அவள் மனதில் ரயில் வண்டியை போல் ஓட, அவை அனைத்தையும் மீறி 
ஒரு வித பயம் அவளை ஆட்டிப்படைத்தது. உலகில் உள்ள அணைத்து 
கடவுள்களையும் வேண்டிக்கொண்டிருந்தாள். பல நூறு முறை வேண்டியும் 
அவளது மனம் நிம்மதி அடையவில்லை. தான் பாஸ் ஆகி விட்டாலே 
போதும் என்று வேண்ட ஆரம்பித்து விட்டாள் இப்பொழுது. 

மணி ஏழு முப்பது ஆனதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு பொய் 
குளித்து விட்டு வந்து பள்ளிக்கூடம் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தாள். 
எட்டு முப்பது மணிக்கெல்லாம் மதிப்பெண்களை பள்ளியில் அறிவித்து 
விடுவார்கள். எனவே அரக்கபரக்க கிளம்பிக்கொண்டிருந்தாள். அவளது 
பதட்டமான நடவடிக்கைகளை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தார் 
மல்லிகா.

"அம்மா நான் ஸ்கூலுக்கு பொய் ரிசல்ட் என்னனு பார்த்துட்டு வந்துடுறேன்" 
என்று கிளம்பினால். "இரும்மா. சாப்டாம போறியே. நீ சாப்புடு அதுக்குள்ள 
நானும் கேளம்பிடுறேன் ரெண்டு பெரும் சேர்ந்தே போகலாம்" என்றார் 
மல்லிகா. ஆனால் சுவேதா "வேண்டாம்மா. நீங்க ஏன் அலையறீங்க. நானே 
பொய் பார்த்துகறேன் வந்து சாபிட்டுகிறேன்" என்று கூறிவிட்டு புறப்பட்டால். 

சுவேதவிர்க்கு ஏனோ அழுகை முட்டிக்கொண்டு நின்றது. இருந்தாலும் 
சமாளித்துக்கொண்டு புறப்பட்டால். பள்ளி அவள் வீட்டின் அருகிலயே தான் 
இருந்தது. அடுத்த பத்தாவது நிமிடம் அவள் பள்ளியில் இருந்தால். அவள்
தோழிகளில் பலர் அங்கு முன்னதாகவே வந்திருந்தனர். அவளது தோழி 
பிரியாவை தேடி ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டால். அவள் தந்தையுடன் 
வந்திருந்தாள். சுவேதவை பார்த்ததும் பிரியா "என்னடி தூங்கு மூஞ்சி 
இன்னைக்கும் தூங்கிட்டயா? ரிசல்ட்டு வந்தப்புறம் தான் வருவன்னு 
நெனச்சேன் எதோ முன்னமே வந்துட்டியே" என்று அவள் பங்கிற்கு 
சீண்டினால். "ப்ச், சும்மா இருடி. நானே ரெண்டு நாலா மார்க்க பத்தி 
பயந்து போய் துக்கம் வராம கஷ்ட படறேன் உனக்கு கிண்டலா இருக்கா?" 
என்றால். 

அப்பொழுது திடீரென ஒரே சலசலப்பு. மதிப்பெண்களை நோட்டிஸ் 
போர்ட்டில் ஒட்டிகொண்டிருன்தனர். அதை பார்த்த அனைவரும் ஒருவரை 
ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு தங்களது மதிப்பெண்களை 
பார்த்துக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சுவேதாவின் இதயம் பலமாக 
துடிக்க துவங்கியது. அவளும் ஒரு வழியாக அவளது மதிப்பெண்ணை 
பார்த்து விட்டாள். முன்னூற்றி சொச்சம் வாங்கி பாஸ் பண்ணியிருந்தால். 
அவளுக்கு தான் பாஸ் ஆகி விட்டோம் என்று மனது சட்ட்று நிம்மதி 
அடைந்தது. ஆனால் அது நெடு நேரம் நீடிக்கவில்லை. 
அவளும் ஒரு சில மாணவர்களும் மட்டுமே குறைந்த மதிப்பெண் 
பெட்ட்ருள்ளனர் என்பதை அறிந்ததும் அவளுக்கு மிகவும் அவமானமாகி 
விட்டது. தன் தோழிகள் அனைவரும் அதிக மதிப்பெண் வாங்கி 
மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.ஆனால் சுவேதவிர்க்கோ மனம் அங்கே 
நிற்க குட இடம் தர வில்லை.எதோ பெரும் குற்ரம் செய்தவள் போல் 
உடல் கூசி போயிற்று அவளுக்கு.அவளையும் மீறி கண்களை 
பொத்துக்கொண்டு கண்ணீர் அருவி போல் கொட்டியது. ஆனால் அவள் ஏன் 
அழுகிறாள் என்று கேட்கக் குட நாதி இல்லாமல் அவள் தனித்து 
விடப்பட்டிருந்தால். அதற்க்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் 
கண்ணீருடன் பள்ளியை விட்டு தன் வீட்டை நோக்கி நடக்க எண்ணி 
கிளம்பிவிட்டாள். 

பள்ளியை விட்டு வெளியே வரும்பொழுது தான் கவனித்தாள் அவளது தாய் 
மல்லிகா பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அவளைப் பார்த்ததும் 
சுவேதா தன் மதிப்பெண்ணை சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள். ஆனால் 
அவள் தாய் அவளை சமாதானப்படுத்தினார். "இப்ப எதுக்குடா அழற. அதான் 
பாஸ் ஆகிட்டல்ல அப்புறம் எதுக்கு அழற?" என்று மகளிடம் கேட்க, 
அவளோ "இல்லம்மா, என் பிரண்ட்ஸ் எல்லோரும் நல்ல மார்க் வாங்கி 
இருக்காங்க நான் தான் ரொம்ப கம்மியா வாங்கிருக்கேன்" என்றால். அதைக் 
கேட்ட மல்லிகா சிரித்தால். "அட லூசுப் பெண்ணே. எதுக்கு உன்ன 
மத்தவங்களோட இணைச்சு பேசற. ஒவ்வொரு மனிதனுக்கும் திறமைகளும் 
முயற்சிகளும் தனி தனி. நீ உன் அளவு முயற்சி செய்தாய். உன் முயற்சி 
இந்த அளவிற்கு தான் பரிசளித்துள்ளது. அவர்கள் முயற்ச்சிக்கு ஏற்றார் 
போல் அவர்களுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு நீ வருத்தப்பட்டு 
அழுவதை விட்டு விட்டு இனி வரும் காலங்களில் அவர்களை விட 
அதிகமாக முயற்சி செய்து நல்ல மதிப்பெண்கள் வாங்கிக் காட்டு. அது தான் 
புத்திசாலித்தனம்" என்றார்.

தன் தாய் என்னதான் சமாதனம் செய்தலும் அவருக்கும் தான் குறைந்த
மதிப்பெண் எடுத்ததில் வருத்தம் உள்ளது என்பதை புரிந்து கொண்டால் 
சுவேதா. கூடவே தான் தனது சோம்பேறித்தனம், முயலாமை போன்ற 
இன்ன பிற கேட்ட பழக்கங்களை விடுத்து நல்ல மதிப்பெண்கள் பெற்று தன் 
தாயை மகிழ்வித்துப் பார்க்க வேண்டும் என்ற உறுதியான முடிவையும் 
எடுத்து விட்டாள். இந்த தோல்வியே அவளது வெற்றிப் பாதையின் 
தொடக்கமாகியது.