எனது பக்கங்கள்

Tuesday, 13 December 2011

சர்க்கஸ் கலைஞர்கள்


ஒரு முறை எங்கள் பள்ளியின் எதிர்புறம் சர்க்கஸ் கூடாரம் 
அமைத்திருந்தனர். அதைப் பார்த்த என் தங்கைகள் அதை பார்க்க போக 
வேண்டும் என்று அடம் பிடிச்சு ஒரு நாள் நாங்க போனோம். பல முறை 
நான் இது போல சர்க்கஸுக்கு போயிருக்கிறேன். ஆனால் இந்த முறை 
எதோ என் மனதில் வேதனை கொடுத்தது. காரணம் நான் என்னுடைய சுய 
அறிவை உபயோக படுத்தும் அளவிற்கு வளந்திருந்தேன் இம்முறை. அந்த 
சர்க்கஸில் சாகசம் புரித பல குழந்தைகளும் பெரியவர்களும் என் மனதை 
அரித்தனர். அவர்களது அவல நிலை நினைத்து எனக்கு ரெண்டு மூணு 
நாள் சரியாய் தூக்கமே வரல. ஆனாலும் ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் 
பெண்ணால் என்ன செய்ய முடியும் அப்படின்னு விட்டுட்டேன். அப்படி 
வருத்தத்தில் இருக்கும் பொது எழுதின கவிதை தான் இவை:

ஒரு சாண்
வயிற்றிற்காக
மரணத்தை 
ஒவ்வொரு கணமும் 
எதிர்நோக்கி வாழும் 
கலைக்கூத்தாடிகள்!
-----------------------------------------------------------------------
பள்ளி செல்லும் வயதில் 
சென்று கொண்டு இருக்கிறான் 
சர்க்கஸில் 
சாகசங்கள் புரிய!
-----------------------------------------------------------------------

உயிரை 
துச்சமாக எண்ணி 
அந்தரத்தில் தொங்கியும் 
ஆகாசத்தில் பரந்தும் 
விண்ணுக்கும் மண்ணுக்கும் 
இடைப்பட்ட வெளியில் 
மரணத்தை ஒவ்வொரு நொடியும் எதிர்நோக்கி 
செய்யும் சாகசங்கள் 
அனைத்திற்கும் காரணம் 
அந்த ஒரு சாண் வயிற்ருக்காக 
உணவு உண்டு வாழ்வதற்காக மட்டுமே!

No comments: