என்னடா தமிழச்சி அப்படின்னு ஒரு பேரான்னு நெனைக்கறீங்களா? அது என் பேரு இல்லைங்க. இது நானே எனக்கு வெச்சுக்க ஆசை படுற பேரு. நான் ஒரு தமிழச்சின்னு சொல்லறதுல தான் பெருமையா நேனைக்கறேங்க.
நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த மிக சாதாரண பெண். அனால் வாழ்க்கையில் நிறைய லட்ச்சியன்களோட நெறைய சாதிக்கணும்னு ஆசையோட இன்னும் என்னால என்னோட இலட்ச்சியங்களை அடைய முடியும்னு ஒரு நம்பிக்கையோட வாழும் சராசரி பெண்.
இது என்னோட தமிழ் பதிவுலகம். இங்கே நான் பதியும் அனைத்தும் என் அறிவிற்கு எட்டும் வகையில் என்னால் உணர்ந்து சொல்லப்பட்டவைகளே. உங்களில் யாரையேனும் எனது பதிவுகளில் ஏதேனும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
என் பக்கத்திற்கு வந்த அனைவருக்கும் எனது நன்றிகள். உங்கள் பின்னூட்டங்கள் எனக்கும் எனது எழுத்துக்கும் மிகவும் உற்சாகம் அளிக்கும் அதனால சும்மா படிக்கறதோட போய்டாம எதாவது பின்னூட்டம் போட்டுட்டு போங்க நண்பர்களே :)