அன்று புதன் கிழமை. என்றைக்கும் இல்லாத அதிசயமாய் சுவேதா விடியற்காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து விட்டாள். படுக்கையை மடித்து வைத்து விட்டு பல் துலக்க வாசற்ப்படி அருகில் வந்து நின்றால். எதோ காலை வெயில் "சுள்" என சுட்டெரித்தது போல் உணர்ந்தால். "இவ்வளவு சீக்கிரமே எழுந்தும் சூரியன் இப்படி கொளுத்துகிறதே" என மனதில் நினைத்தவாரே பல் துலக்க ஆரம்பித்தால். அது பங்குனி மாதம் என்பதால் சூரியன் மிக வேகமாக உதித்து விடும் என்பதை கூட உணர முடியாத அளவிற்கு அவள் இந்த 2 மாதங்களாக காலை 8 மணி வரை தூங்க கற்றுகொண்டிருந்தால். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு விடுமுறையை மிக மகிழ்ச்சியாக கழித்துக்கொண்டிருக்கும் பெண் சுவேதா. இன்று தான் பத்தாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்க்கு தான் இந்த விடியற்காலையில் எழுந்திருந்தால். இரவெல்லாம் தான் பாஸ் ஆகிவிடுவோமா? என்ன மதிப்பெண் வரும்? ஒரு வேலை பெயில் ஆகிவிட்டால்? அய்யயோ அம்மா கொன்னுடுவங்களே... என பல கேள்விகளும் பதில்களுமை பலவாறு தோன்றி சுவேதாவின் தூக்கத்தை முழுதாய் கெடுத்து விட்டிருந்தது. அதனால் தான் இருப்பு கொள்ளாமல் அதிகாலயிலயே எழுந்து விட்டாள். "என்ன சுவேதா? அதிசயமா இருக்கே. இன்னிக்கு மழை அடிச்சு ஊத்த போகுது போ. நீ இவ்வளவு சீக்கிரமாகவே எழுந்துருக்கியே. என்ன ரிசல்ட்ட நெனைச்சு தூக்கம் வரலையா? எப்படியும் நீ ஸ்டேட் ரான்க் ஒன்னும் வாங்கப் போறது இல்ல அப்புறம் என்ன நிமதிய தூங்க வேண்டியது தானே? " பக்கத்து வீட்டு ரேவதி அக்க நக்கலாக பேச சுவாதிக்கு பற்றிக்கொண்டு வந்தது. அமைதியாய் இருந்து விட்டாள். அவளால் வேறென்ன செய்ய முடியும்! தன்னால் மற்றவர்களை போல் நன்றாக படிக்க முடிய வில்லையே என்ற ஏக்கம் அவளுக்குலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பட புத்தகத்தை எடுத்தாலே எட்டிக்காய் போல் கசந்தது. அவளும் எதோ முடிந்தவரை தன் தாயின் ஆசைக்ககப் படித்து பரிட்சையும் எழுதி விட்டாள். இன்று தெரிந்து விடும் அவளது மதிப்பெண் என்னவென்று. மனதும் உடலும் லேசாக நடுங்கத் தொடங்கியது. தொண்டைக் குழியில் எதோ ஒன்று சிக்கிக்கொள்ள கண்களை முட்டிக்கொண்டு கண்ணீர் எட்டிப் பார்த்தது. சட்டென்று சுதாரித்துக் கொண்டு வாயை கொப்பளித்து விட்டு வீட்டினுள் வந்தால். அது ஒரு சிறிய அறை. பத்துக்குப் பதினாறு எண்ணக் கட்டப்பட்ட ஒட்டறை அறை. அங்கே தான் சுவேதாவும் அவள் தாய் மல்லிகாவும் குடியிருந்தனர். சுவேதா பிறப்பதற்கு ஒரு சில மாதங்கள் முன்னதாகவே அவளது தந்தை ஒரு விபத்தில் உயிரிழந்து விட்டார். அதன் பிறகு சுவேதவை பெற்று வளர்த்த அவள் தாய் பட்ட கஷ்டத்திற்கு அளவேயில்லை. மல்லிகா மிகவும் வைராக்கியமும் நம்பிக்கையும் உள்ளவர். தன் பெண்ணை எப்படியாவது ஆங்கில பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துவிட வேண்டும் என்ற ஆசையில் பாதிக் கிணறு தாண்டியாயிற்று. அந்த ஊரிலேயே பிரபலமான ஆங்கில பள்ளியில் தன் பெண் படித்து பத்தாம் வகுப்புத் தேர்வும் எழுதிவிட்டாள். வெளிப்புறம் பார்க்க இயல்பாக இருந்தாலும் இன்று அந்த தாயின் மனமும் தன் மகளின் மதிப்பெண் பற்றிய கவலைகள் தேங்கிக் கிடந்ததை அவரது கண்கள் காட்டிக் கொடுத்தது. பல் துலக்கிவிட்டு வந்த சுவேதா மீண்டும் கட்டிலில் சாய்ந்தால். மல்லிக காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார். ஏதேதோ எண்ணங்கள் அவள் மனதில் ரயில் வண்டியை போல் ஓட, அவை அனைத்தையும் மீறி ஒரு வித பயம் அவளை ஆட்டிப்படைத்தது. உலகில் உள்ள அணைத்து கடவுள்களையும் வேண்டிக்கொண்டிருந்தாள். பல நூறு முறை வேண்டியும் அவளது மனம் நிம்மதி அடையவில்லை. தான் பாஸ் ஆகி விட்டாலே போதும் என்று வேண்ட ஆரம்பித்து விட்டாள் இப்பொழுது. மணி ஏழு முப்பது ஆனதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு பொய் குளித்து விட்டு வந்து பள்ளிக்கூடம் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தாள். எட்டு முப்பது மணிக்கெல்லாம் மதிப்பெண்களை பள்ளியில் அறிவித்து விடுவார்கள். எனவே அரக்கபரக்க கிளம்பிக்கொண்டிருந்தாள். அவளது பதட்டமான நடவடிக்கைகளை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தார் மல்லிகா. "அம்மா நான் ஸ்கூலுக்கு பொய் ரிசல்ட் என்னனு பார்த்துட்டு வந்துடுறேன்" என்று கிளம்பினால். "இரும்மா. சாப்டாம போறியே. நீ சாப்புடு அதுக்குள்ள நானும் கேளம்பிடுறேன் ரெண்டு பெரும் சேர்ந்தே போகலாம்" என்றார் மல்லிகா. ஆனால் சுவேதா "வேண்டாம்மா. நீங்க ஏன் அலையறீங்க. நானே பொய் பார்த்துகறேன் வந்து சாபிட்டுகிறேன்" என்று கூறிவிட்டு புறப்பட்டால். சுவேதவிர்க்கு ஏனோ அழுகை முட்டிக்கொண்டு நின்றது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு புறப்பட்டால். பள்ளி அவள் வீட்டின் அருகிலயே தான் இருந்தது. அடுத்த பத்தாவது நிமிடம் அவள் பள்ளியில் இருந்தால். அவள் தோழிகளில் பலர் அங்கு முன்னதாகவே வந்திருந்தனர். அவளது தோழி பிரியாவை தேடி ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டால். அவள் தந்தையுடன் வந்திருந்தாள். சுவேதவை பார்த்ததும் பிரியா "என்னடி தூங்கு மூஞ்சி இன்னைக்கும் தூங்கிட்டயா? ரிசல்ட்டு வந்தப்புறம் தான் வருவன்னு நெனச்சேன் எதோ முன்னமே வந்துட்டியே" என்று அவள் பங்கிற்கு சீண்டினால். "ப்ச், சும்மா இருடி. நானே ரெண்டு நாலா மார்க்க பத்தி பயந்து போய் துக்கம் வராம கஷ்ட படறேன் உனக்கு கிண்டலா இருக்கா?" என்றால். அப்பொழுது திடீரென ஒரே சலசலப்பு. மதிப்பெண்களை நோட்டிஸ் போர்ட்டில் ஒட்டிகொண்டிருன்தனர். அதை பார்த்த அனைவரும் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு தங்களது மதிப்பெண்களை பார்த்துக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சுவேதாவின் இதயம் பலமாக துடிக்க துவங்கியது. அவளும் ஒரு வழியாக அவளது மதிப்பெண்ணை பார்த்து விட்டாள். முன்னூற்றி சொச்சம் வாங்கி பாஸ் பண்ணியிருந்தால். அவளுக்கு தான் பாஸ் ஆகி விட்டோம் என்று மனது சட்ட்று நிம்மதி அடைந்தது. ஆனால் அது நெடு நேரம் நீடிக்கவில்லை. அவளும் ஒரு சில மாணவர்களும் மட்டுமே குறைந்த மதிப்பெண் பெட்ட்ருள்ளனர் என்பதை அறிந்ததும் அவளுக்கு மிகவும் அவமானமாகி விட்டது. தன் தோழிகள் அனைவரும் அதிக மதிப்பெண் வாங்கி மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.ஆனால் சுவேதவிர்க்கோ மனம் அங்கே நிற்க குட இடம் தர வில்லை.எதோ பெரும் குற்ரம் செய்தவள் போல் உடல் கூசி போயிற்று அவளுக்கு.அவளையும் மீறி கண்களை பொத்துக்கொண்டு கண்ணீர் அருவி போல் கொட்டியது. ஆனால் அவள் ஏன் அழுகிறாள் என்று கேட்கக் குட நாதி இல்லாமல் அவள் தனித்து விடப்பட்டிருந்தால். அதற்க்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் கண்ணீருடன் பள்ளியை விட்டு தன் வீட்டை நோக்கி நடக்க எண்ணி கிளம்பிவிட்டாள். பள்ளியை விட்டு வெளியே வரும்பொழுது தான் கவனித்தாள் அவளது தாய் மல்லிகா பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அவளைப் பார்த்ததும் சுவேதா தன் மதிப்பெண்ணை சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவள் தாய் அவளை சமாதானப்படுத்தினார். "இப்ப எதுக்குடா அழற. அதான் பாஸ் ஆகிட்டல்ல அப்புறம் எதுக்கு அழற?" என்று மகளிடம் கேட்க, அவளோ "இல்லம்மா, என் பிரண்ட்ஸ் எல்லோரும் நல்ல மார்க் வாங்கி இருக்காங்க நான் தான் ரொம்ப கம்மியா வாங்கிருக்கேன்" என்றால். அதைக் கேட்ட மல்லிகா சிரித்தால். "அட லூசுப் பெண்ணே. எதுக்கு உன்ன மத்தவங்களோட இணைச்சு பேசற. ஒவ்வொரு மனிதனுக்கும் திறமைகளும் முயற்சிகளும் தனி தனி. நீ உன் அளவு முயற்சி செய்தாய். உன் முயற்சி இந்த அளவிற்கு தான் பரிசளித்துள்ளது. அவர்கள் முயற்ச்சிக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு நீ வருத்தப்பட்டு அழுவதை விட்டு விட்டு இனி வரும் காலங்களில் அவர்களை விட அதிகமாக முயற்சி செய்து நல்ல மதிப்பெண்கள் வாங்கிக் காட்டு. அது தான் புத்திசாலித்தனம்" என்றார். தன் தாய் என்னதான் சமாதனம் செய்தலும் அவருக்கும் தான் குறைந்த மதிப்பெண் எடுத்ததில் வருத்தம் உள்ளது என்பதை புரிந்து கொண்டால் சுவேதா. கூடவே தான் தனது சோம்பேறித்தனம், முயலாமை போன்ற இன்ன பிற கேட்ட பழக்கங்களை விடுத்து நல்ல மதிப்பெண்கள் பெற்று தன் தாயை மகிழ்வித்துப் பார்க்க வேண்டும் என்ற உறுதியான முடிவையும் எடுத்து விட்டாள். இந்த தோல்வியே அவளது வெற்றிப் பாதையின் தொடக்கமாகியது.
Tuesday, 13 December 2011
தொடக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment