மனிதர்களும் அவர்களது உணர்வுகளும் எவ்வளவு உன்னதமானது என்பதை மிக சரியாக உணர்ந்து இப்படத்தை இயக்கி உள்ளார் டைரக்டர் சரவணன். ஒவ்வொரு மனிதனுக்கும் இழப்பு என்பது ஒன்று தான் என்று நாம் நினைத்திருந்த எண்ணம் எவ்வளவு பொய்யான ஒன்று என்பதை இப்படம் உணர்த்தியுள்ளது. ஜெய் - இப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாராட்டப்பட வேண்டிய ஒரு நடிகர். எப்படித்தான் இப்படி அப்பாவியா நடிக்க முடியுதோ தெரியல. பட் செம்ம க்யூட். அப்பாவியா அஞ்சலியை தூரத்திலிருந்தே பார்த்து கை அசைக்குறதும் அஞ்சலி அவரது வீட்டிற்கு வந்ததும் நம்பாமல் "அவங்களுக்கு முடி நீலமா இருக்கும்" என்று கூறும் போதும், காபி ஷாப்பில் அமர்ந்து ரோஸ்ட் கேட்கும் போதும் "என்னங்க காபி சூடவே இல்ல" "இனி இந்த மாதிரி ஹோட்டல் எல்லாம் வேண்டாங்க பட்ஜெட் எகுருது" என்று அவரது ஒவ்வொரு வசனமும் அழகு கூடவே அப்பாவித்தனம் ஒட்டிகிட்டே இருக்கு. அஞ்சலியை "வாங்க போங்க" என்று தான் கடைசி வரை கூப்பிடுகிறார். இது கொஞ்சம் ஓவராகவே இருக்கு. அதே மாதிரி இவ்வளவு அப்பாவியா இருக்கிறவரு அஞ்சலியை காதலிச்ச பசங்க ரெண்டு பேரையும் கட்டு போடுற அளவுக்கு அடிச்சுருக்கருனு காத்திருக்கிறது கொஞ்சம் பழைய ஹீரோ ஸ்டைல். மத்த படி ஜெய் நடிப்பு பிரமாதம். அவரு அப்பாவி இல்லைன்னாலும் இந்த கேரக்டர் அவருக்கு பொருத்தமாவே இருக்கு. அடுத்து நம்ம அஞ்சலி. அட என்ன இது அஞ்சலி கொஞ்சம் குண்டகிட்டாங்க போல. பட் இப்பவும் அழகா தான் இருக்காங்க. வேற ஊர்ல இருந்து வந்து நம்ம தமிழ பேசவும் தெரியாம ஒழுங்கா நடிக்கவும் தெரியாம இருக்க பல நடிகைகள் அஞ்சலியா பார்த்து கத்துக்க வேண்டிய நடிப்புத் திறன் மிக அதிகம். இந்த படத்துல அஞ்சலி ஒரு நர்ஸா வேலை பாக்குறாங்க. அது அவங்களுக்கு எத்தனையோ உயிரை காப்பாத்த உதவியும் தன் காதலனை காப்பாற்ற முடியாமல் கடைசியாக அஞ்சலி அழும் ஓலம் இன்னும் என் காதினில் ஒலித்துக்கொண்டே இருக்கு. என்னதான் நர்ஸ் வேலை பார்த்தாலும் அவரது குணத்துக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை. அனால் இன்றைய நிலைமையில் மருத்துவமனைகளில் உலவும் பல நர்சுகள் இவரை போல தான் இருக்கின்றனர் அதனால் இதை ஒத்துக்கொள்ளலாம். அவர் ஜெய் தன்னை காதலிக்கிறார் என்ற ஒரு காரணத்திற்காக அவரை படாத பாடு படுத்துகிறார். இப்படியும் சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் போல எனக்கு தெரியல பா. அப்புறம் நடிப்ப பத்தி பேசனும்ன அஞ்சலி ஒரு அபாரமான நடிகை. எந்த கேரக்ட்டர் குடுத்தாலும் அதற்க்கு ஏற்றார் போல் அவரை மாற்றிக் கொள்கிறார். அவரது அழகும் திறமையும் படத்திற்கு படம் மெருகேறிக்கொண்டே போகிறது. எனக்கு பிடித்த நடிகைகள் லிஸ்டில் இவரும் சேர்ந்து விட்டார். அனன்யா - என்ன ஒரு அமைதியான கலையான முகம். நான் பார்த்த நடிகைகளிலேயே மிகவும் சாந்தமான முகம் இவருக்கு தான். இதை உணர்ந்து கொண்ட இயக்குனர் இவருக்கு ஒரு அப்பாவியான ரோல் மிக பொருத்தமாக கொடுத்துள்ளார். அனன்யாவின் நடிப்பா மிக அருமை. ஆனால் இந்த ஊமை குசும்புனு சொலுவாங்க தெரியுமா அந்த குசும்பையும் கொஞ்சம் அனனியாவின் நடிப்பில் சேர்த்திருக்கிறார்கள். "ஒரு பொண்ணு உங்க கிட்ட ஹெல்ப் கேட்ட அவல 13 b வரைக்கும் ஏத்தி விட்டது தப்பில ஆனா அவள ஒரு நாள் புல்லா கூட்டிட்டு சுத்துறது தப்பு. இப்ப உங்க ஒரு நாள் சம்பளம் போச்சுல்ல. இனிமேல் இப்படி இருக்காதீங்க" என்று அட்வைஸ் பண்ணும் இடத்தில் உச்ச கட்ட குசும்பு. அனன்யா நன்றாகவே நடித்திருக்கிறார். சர்வா - ஒரு புது முக நடிகராகவே தோன்றுகிறார். நடிப்பு இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனாலும் அவரது கியுட்னஸ் நடிப்பை மிஞ்சி விடுகிறது. இருந்தாலும் நீங்க கொஞ்சம் இம்ப்ரூவே பண்ணும் சார். சரவணன்- இவர் தான் இந்த படத்தின் வெற்றிக்கு முழு முதல் காரணம். இவரது திறமைக்கு மிகப் பெரிய பரிசு இப்படத்தின் வெற்றியே. வாழ்த்துக்கள் சரவணன். உங்களுக்கு ஒரு மிக பெரிய எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. இசையும் படத்தின் காமெரா பதிவுகளும் நம்மை வேறு ஒரு அற்புதமான உலகிற்கு அழைத்து செல்கிறது. இப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைங்கர்களுக்கும் என்னது மனமார்ந்த பாராட்டுக்கள். ஒரு நல படத்தை கொடுத்துள்ளார்கள். அனநிவரும் பார்ப்பதோடு விடாமல் வாகனங்களை ஓட்டும் பொது சிறிது கவனத்தோட ஓட்டுவது நல்லது. Hats off team :) :) :)
Tuesday, 13 December 2011
எங்கேயும் எப்போதும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment