எனது பக்கங்கள்

Tuesday, 13 December 2011

யானை e


நான் ஒரு முறை மைசூர் போயிருந்தேன். சும்மா எல்லாம் ஒன்னும் 
இல்லங்க ஒரு பிக்னிக்கு (அதாவது சுற்றுலா). அப்ப அங்க நான் பத்த பல 
இடங்கள்ள மைசூர் ஜூவும் ஒன்னு. அதுல நெறைய பறவைகள் 
விலங்குகள்னு பாக்க நல்ல தான் இருந்துச்சு. ஆனா நடந்து வர்றதுக்குள 
அவ்வளோ தான். மனுஷன் நொந்து நூடுல்ஸ் ஆகிடனும். அவ்வளோ 
பெரிய ஜூ. நாங்களும் எவ்ளோ நேரம் தான் கால் வலிக்காத மாதிரியே 
நடிக்கறது. நடக்க முடியாம பாதியிலேயே வந்துட்டோம். இருந்ததாலும் 
ஒரு சில படங்கள் எடுத்ததில் மகிழ்ச்சி எனக்கு. அதுல ஒரு யானை 
படம் தான் இது.



இந்த சிற்பம் அதே மைசூர்ல தான் ஒரு சின்ன கோவிலுக்கு 
போயிருந்தோம் அப்ப எடுத்தது அந்த கோவில் தூண்ல இருந்து. 
(கோவில் பேரு மறந்துடுச்சுங்க !!! )  


அந்த கால சிற்பக் கலைங்கர்கள் எல்லோரும் எவ்ளோ பெரிய 
திறமைசாலிகள் இல்ல. அவர்களது சிற்ப்பங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் 
ஆகியும் கூட இன்னும் புதுசு போலவே இருக்குல்ல.

No comments: