எனது பக்கங்கள்

Tuesday, 13 December 2011

இதுக்கு பேரு தான் அழகுல மயங்கி விழுகுறதோ???


நண்பர்களே இன்னிக்கு எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துடுச்சு... 
அது என்ன தெரியுமா??? 
இதுக்கு பேரு தான் அழகுல மயங்கி விழுகுறதோ???

என்ன மக்கள்ஸ் புரியலையா... சரி விடுங்க புரியற மாதிரியே 
சொல்லிடுறேன்... 


எப்பவும் போலவே இன்னிக்கும் நான் ஆபீஸ் கிளம்ப லேட் ஆகிடுச்சு. 
அதனால எப்பொதும் போற வேகத்த விட கொஞ்சம் ஜாஸ்தியா என்னோட 
ஸ்கூட்டிய வெரட்டிட்டு வந்தேன். அப்போ பாத்திங்கன்னா ஒரு பையன் 
கண்டிப்பா என்ன விட சின்ன பையனா தான் இருப்பான். அவன் ரொம்ப 
நேரமா என் கூடவே வண்டிய ஒட்டிட்டு வந்தான். 

அப்பப்ப என்ன முந்துறதும் அப்புறம் சுலோ பன்னுரதுமா ஒரே தொலைங்க. 
நானே அவசரமா போயிட்டு இருக்கேன் படுபாவி பய என் கூடவே வந்துட்டு 
இருந்தான். கடுப்பான நான் என் வேகத்தை கொறைச்சு அவனை முன்னாடி 
போக விட்டேன். ஆனா அவன் கேட்ட நேரம் அவன் நான் சுலோ 
பண்ணினதா பாத்து அவனும் திடீர்னு சுலோ பண்ண அவனுக்கு பின்னாடி 
வந்தவர் போய் அவன் வண்டியில் இடிக்க அவ்வளவு தான். ரெண்டு பெரும் 
வண்டியோட கீழே விழுந்துட்டாங்க. 


நான் பதறிப் போய் அச்சசோனு சொல்ல அந்த பையன அவர் திட்ட அவனோ 
என்னையே பாத்துகிட்டு எந்திரிக்க எனக்கு சரின்னு படல நான்
கெளம்பிட்டேன். நான் நேனைக்கேறேன் அவன் மனசுக்குள்ள என்ன கண்ட 
படி திட்டிருப்பான்னு. நல்ல வேளை அவங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் 
ஆகல. இல்லைனா என்ன அகிருக்குமோ. நெனைச்சுப் பாக்கவே பயமா 
இருக்கு. 
சரி விடுங்க நான் என்ன பண்ணட்டும் அவனா வந்து 
விழுந்ததுக்கு. ஆனா அவன் விழுந்ததும் டக்குனு எனக்கு இந்த டயலாக் 
தான் நியாபகம் வந்துச்சு... ஹி ஹி ஹி என்ன பண்ணுறது 
விசிறிங்க(அதாங்க fans) தொல்லை ஜாஸ்த்தி ஆகிடுச்சு பா...

No comments: