வணக்கம் தோழர்களே!!!
இந்த வருடத்தின் இறுதி நாட்களில் நாம இருக்கோம் (என்னமோ வாழ்க்கையோட இறுதி மாதிரி சொல்றாளே!) அதனால இந்த வருடம் நான் கத்துகிட்ட ஒரு சில விசயங்களை உங்களோட பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன்.
இந்த வரிசையில் முதல்ல வர்றது என்னோட கைவினைப்பொருள் கற்றுக்கொண்டது தான். (அடடா என்ன ஒரு சாதனை!) ஆமாங்க. இத்தனை நாளும் எனக்கு கைவினைபொருட்கள் செய்வதில் ஆசை இருந்தாலும் அதை கத்துக்கவோ இல்லை கத்துக்கிட்டதை தொடர்ந்து செய்து பார்க்கவோ நான் முயற்சி செய்ததே இல்லை (அதான் நீ ஒரு சோம்பேறின்னு உலகத்துக்கே தெரியுமே! என்னவோ ஒரு கலக்டர் ரேஞ்சுக்கு பிஸி பிஸினு பில்டப் வேற... அவ்வவ்வ்வ்வ்... )
எதோ என்னோட நல்ல நேரம் ஒரு சில மாதங்களுக்கு முன்னாடி இணையதளத்தில் பல வகை கலைபோருட்கள் செய்வதை முடிந்தவரை படித்து கொண்டு என்னோட புது தொழில் (அடடா இது எப்போதில இருந்து??? அப்ப அம்பானி ஏலம் ஓரங்கட்ட வேண்டியது தான்!) தொடங்கி இருக்கேன். என் தங்கச்சி தான் இதுக்கு விளம்பரதாரர் (ஓஹோ... இதுக்கு விளம்பரதாரர் வேறயா... வெளங்கின மாதிரி தான்!) நான் செய்து கொடுக்கும் கிளிப், ஹேர் பேண்ட் எல்லாத்தும் அவ தான் எனக்கு வித்து குடுக்கறா. (அப்ப நீங்களும் ஒரு பிசினஸ் வுமன் ஆகிடீங்கன்னு சொல்லுங்க !) என்னோட படைப்புகளில் சில உங்கள் பார்வைக்காக... (செஞ்சதே இவ்ளோ தான் இதுல என்ன ஒரு பில்டப்!)...
அடுத்து நான் கிளாஸ் பெயிண்டிங் செஞ்சு காசுக்கு விக்க ஆரம்பிசுருக்கேங்க.(என்னது????? ) அதாவது இது எல்லாம் எனக்கு காலேஜ் படிக்கும் போதே கத்துகிட்டேன் ஆனா அதை தொடர்ந்து செய்யாம அப்படியே விட்டுட்டேன்.(இதுக்கு பேரு தான் பந்தா....) இப்ப தான் எனக்கு ஒரு விசேசத்துக்கு செஞ்சு குடுக்க வாய்ப்பு கெடைச்சுது. கெடைச்ச வாய்ப்ப விடக்கூடாது இல்லையா (ஆமா ஆமா கெடைச்ச ஒரு இளிச்சவாய் கச்டமரும் போய்டகூடாது பாருங்க!) அதனால ஒரு பெரிய கிளாஸ் பெயிண்டிங் செஞ்சு குடுத்தேன்... எதோ நெறைய கிடைக்காட்டியும் ஓரளவுக்கு பணம் கெடைச்சது... (பணம் குடுத்ததே பெருசு இந்த லட்சணத்துல நக்கல் வேற!)... அந்த படமும் உங்கள் பார்வைக்காக...
அப்புறம் என்னங்க... (நீங்க தான் சொல்லணும்!) எதோ நெறைய கத்துக்கலைன்னாலும் உருப்படியா வருமானம் பண்ற மாதிரி ஒரு சில விசயங்கள கத்து வெச்சுருக்கேனே... (ஆச்சர்யமான விஷயம் தான்!) இதை இந்த வருசத்தோட முழுக்கு போடாம தொடர்ந்து செஞ்சு நெறைய சம்பாதிச்சு நானும் அம்பானி மாதிரி ஆவேன்னு நெனைக்கறேன். (பாவம் பா அந்த அம்பானி எல்லாரும் அவர மாதிரியே ஆகனும்னா அவரு எங்க தான் போவாரு!) அதுக்கு தமிழ் படத்துல வர்ற மாதிரி ஒரு தீம் சாங் வேணுமே... ஹ்ம்ம்ம்... கண்டுபிடிச்சுட்டேன்... சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு..... சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு.... (அய்யயோ உன் அலம்பலுக்கு அளவே இல்லாம போய்டுச்சே... நான் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருக்கனுமே... நான் எஸ்கேப் ஆகிடுறேன்!!!)
பி.கு. என்னோட மைண்டு வாய்ஸ் தாங்க அந்த பிராக்கேட்டுல இருக்கறது...

No comments:
Post a Comment