நான் இந்த அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து நான்கு மாதங்களாகப் போகின்றது இன்றுடன். நாட்கள் நொடிகளை போல் மிக வேகமாக கடந்து செல்வதை நினைத்தாள் பிரமிப்பாக உள்ளது. இப்பொழுது தான் மேலாண்மைப் படிப்பை முடித்து பல பிரச்சனைகளுக்கு பிறகு என் வீடு வந்து சேர்ந்தது போல் உள்ளது. ஆனால் இன்றுடன் நான் என் படிப்பை முடித்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.
என் தோழி ஒருத்தியின் மூலமாக தான் இந்த அலுவலகத்திற்கு வந்தேன். அவள் என் பள்ளியிலும் கல்லூரியிலும் நெருங்கிய தோழியாக இருந்தவள். அவளிடம் ஒரு வகையான வசீகரம் என்றுமே நிறைந்திருக்கும். அவளை நான் பல முறை ரசித்ததுண்டு. நான் மட்டும் அல்ல பலரும் அவளை ரசித்துள்ளனர். அவள் நல்ல மஞ்சள் நிறம். உயரம். சட்ட்ரே பருமனான தேகம். வடிவான முக லட்சணம். இதை எல்லாம் மீறி பலரிடம் இல்லாத நான் பார்க்காத மரியாதையை கலந்த நட்பு அவளிடம் உருவாகியது. அவள் அஹங்காரம் பிடித்தவள் அல்ல. ஆனால் பார்பவர்களுக்கு அவளின் தோற்றம் அப்படி ஒரு உணர்வை தரும். நானும் அப்படி தான் நினைத்தேன் அவளிடம் பழகும் முன்னர்.
அப்பொழுது எல்லாம் என் வீட்டில் சிறிது ஏழ்மை. அதுவும் இல்லாமல் நான் சட்ட்று குள்ளமாகவும் குண்டாகவும் கண் கண்ணாடி அணிந்தும் இருப்பேன். அதன் காரணமாக நான் யாரிடமும் அதிகம் பேசாமல் ஒரு வித தாழ்வு மனப்பான்மையுடன் உலா வருவேன். என்னை யாருக்கும் பிடிக்காது என்று நினைத்து என்னை நானே கூடத்தில் இருந்து தனிமைபடுத்திக் கொள்வேன். ஆனால் நான் அது போல் இருப்பது தவறு என்று உணர்ந்து என்னை நானே செதுக்கி கொண்டு இருந்த நாட்களில் தான் அவளது தோழமை என் வேறு ஒரு நெருங்கிய தோழியின் மூலமாக கிடைத்தது.
இவளைப் பார்க்கும் பொது எல்லாம் எனக்கும் அவளைப் போல் வள வேண்டும் போல் தோன்றும். அவளை சுற்றி எபோழுதும் ஒரு கூடம் இருந்து கொண்டே இருக்கும். அதில் நானும் ஒருத்தியாக ஐக்கியமானேன். ஆனால் அவள் அனைவரிடமும் சமமாக தான் பழகுவாள். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நடப்பு அவளிடம் இருந்தது. அவளை பார்த்து தான் நானும் எப்படி பழகுவது என்று கற்று கொண்டேன்.
அவள் நட்பை மதிப்பவள். ஆனால் நட்பை ஒரு வித எல்லை கொடு போட்டு அதனுள் மட்டுமே சுவசிப்பவள். ஏதேனும் படிப்பில் உதவி என்றல் தயங்காமல் செய்வாள். ஆனால் அதுவே பணம் என்று வந்தால் ஒரு துளி கூட இசைந்து கொடுக்க மாட்டாள். அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்னில் நான் மிகவும் தாராள பிரபு. என் தாய் எனக்கு கொடுக்கும் ஒரு சில பொன்னான சில்லறைகளையும் என் பணக்கார தோழிகள் கேட்டால் கொடுத்து விட்டு பின் வருத்தப் படுவேன். ஆனால் இவள் அப்படி அல்ல. கருமி என்று சொல்லும் அளவு இல்லை என்றாலும் இவள் பண விசயத்தில் கறார் தான்.
நானும் பள்ளியில் இவளுடன் படித்து பின் கல்லூரியிலும் ஒன்றாகவே சேர்ந்தோம். ஆனால் கல்லூரியில் எனக்கென்று ஒரு விசிறி வட்டம் உருவாகும் அளவு நான் என் நடை உடை பேச்சு அனைத்திலும் தேறிவிட்டேன். என் தோழிகள் என்னை பற்றி கூறும் பொழுதுகளில் மிகவும் பெருமையாக இருக்கும். எதோ உலக மகா சாதனை புரிந்து விட்ட மிதப்பு என்னிடம். நானும் பண விசயத்தில் மிக கவனமாகவும் பொறுப்பாகவும் இருந்தேன். எனது கல்லூரி நாட்கள் மிகவும் வசந்தமானது ஏனென்னில் அது மகளிர் கல்லூரி. மகளிர் மட்டும் இருப்பது எத்துனை மகிழ்ச்சி தெரியுமா. அது ஒரு கனாக்காலம் என்பது தான் இன்றைய நிலை.
இளமையின் கடைசி கட்டத்தில் இருக்கும் என் வயது போன்ற பெண்களுக்கு பல வித கவலைகளும் வருதங்களுமே எஞ்சுகின்றன. நாங்களும் அது போலவே தான் உள்ளோம். இன்று நாங்கள் இருவரும் இரண்டு வருட இடைவெளிக்கு பினர் ஒரே அலுவலகத்தில் வேலை புரிகிறோம். ஆனால் முன் இருந்த சிநேகம் தொலமிய இன்று இல்லை. கரணம் பல. ஆனால் ஒருவர் மீது வைத்துள்ள அன்பு என் குறைகிறது. அன்பு பாசம் காதல் இவை அனைத்தும் ஒரு முறை ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் மாறாது மறையாது என்று பலர் பல விதமாக சொல்வதுண்டு. அவை உண்மை என்றே நானும் நினைத்திருந்தேன். ஆனால் உலகின் நியதி அதுவல்ல. அனைவரும் தத்தம் வாழ்க்கை படகில் ஏறி பயணிப்பதே மிக அவசியம் என்று ஆகி விட்டது இந்த அவசர உலகில். இதில் எங்கே பொய் பள்ளித் தொலயொடு பேசுவது கல்லூரித் தோழியோடு அரட்டை அடிப்பது. ஏதேனும் கல்யாணம் வளைகாப்பு என்று தோழிகள் அழைத்தாள் கூட போக முடியாத அளவிற்கு அவரவர் வாழ்க்கை முக்கியமாகி விட்டது.
என் தோழிகள் பலருக்கும் ஒருவர் பின் ஒருவராக திடுமணம் நடந்து கொண்டே வருகிறது. எஞ்சி உள்ளது ஒரு சிலர் மட்டுமே. ஆனால் நாங்கள் மனம் ஆகவில்லை என்றாலும் ஒரு வித பந்தத்தினுள் அகப்பட்டு கொண்டிருப்பதே எண்களின் தொடர்புகள் முன்பு போல் இல்லாததற்கு ஒரு மிக பெரிய காரணம் என நான் கருதுகிறேன். பெண்களின் நட்பு ரயில் சிநேகம் போல தான் என்று என் தாய் அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் நான் அதை ஏற்றுக் கொல்லாமல் பல முறை வாதாடி இருக்கிறேன். இப்பொழுது எங்கள் நிலையை நினைக்கயில் என் தாய் சொனது நினைவுக்கு வந்து செல்கிறது.
ஒரு பெண்ணின் வாழ்வில் ஒரு ஆண் நுழைந்து விட்டாலே அவளது சுதந்திரம் பறிபோய் விடுகிறது என்றே என் எண்ணம். அது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது என்பதை என் தோழிகள் பலரது கணவன்மார்களை பார்த்தே புரிந்து கொண்டேன். என்ன தான் இருந்தாலும் பெண்களால் இன்றளவும் ஆண்களை போல் சுதந்திரமாய் பறக்க முடிவதில்லை. சாவின் விளிம்பில் இருக்கும் வரை கூட ஆண்கள் பலர் நெருங்கிய நண்பர்களாகவே இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் பெண்களோ அப்படி இருப்பவர்கள் மிக மிக குறைவு. நூற்றாண்டுகள் பல மாறினாலும் பெண்கள் பெண்களாகவே தான் இருக்கின்றனர் இன்றளவும்.
ஏதேனும் கடைத் தெரு போகும் பொது, குடும்பத்தோடு சுற்றுலா போகும் போதோ, விசேச வீடுகளுக்கு போகும் போதோ தான் பெண்களின் அநேக தோழமை காணப் படும். அதும் ஒரு சில நிமிடங்களே தாக்குப் பிடிக்கும். இது போன்ற சில சமயங்களில் தான் நம் சுதந்திரம் பற்றிய எண்ணமே பலருக்கு வருகிறது. பின் அன்று இரவு துக்கம் வரும் வரை தான் தோழி பற்றிய ஒரு சில சிந்தனைகளோடு முடிந்து போகிறது. நானும் அது போன்று என்றும் நடந்து விட கூடாது என்று மனதில் பல முறை நினைத்துள்ளேன். இன்றும் நினைக்கிறேன். தோழமையின் பேரின்பத்தை பருக துடிக்கும் வண்டு போல் இன்றைய இரவு என் கனவில் தோழிகளுடன் கரைக்க மனது திட்டமிட தொடங்கி விட்டது!!!
No comments:
Post a Comment