எனது பக்கங்கள்

Tuesday, 13 December 2011

என்ன கொடுமை டா சாமி!!!


என்னங்க பதிவோட தலைப்பே கொடுமையா இருக்கேன்னு பாக்குறீங்களா??? 
என்னங்க பண்றது. என் நிலைமை இன்னைக்கு அவ்ளோ கொடுமையா 
இருக்கு. ஒரு பழமொழி சொல்லுவங்கலங்க அதான் "கொடுமை 
கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு 
ஆடிச்சாம்" அப்படி தான் இன்னிக்கு எனக்கும் இருக்கு. 

சும்மா நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். ஆனா என் கூட 
வேலை பாக்குற துரோகிகள் சிலர் என்னை சாரீ கட்டிட்டு வாங்க உங்களுக்கு 
நல இருக்கும்ன்னு உசுப்பேத்தி விட்டு மனச ரணகலமாகிடாங்க :(.


இன்னிக்கு வெள்ளிக்கிழமை ஆச்சே மங்களகரம இருக்கட்டும்ன்னு 
நெனைச்சு (அதான் நான் பண்ணின பெரிய தப்பு) என்கிட்ட இருந்த ஒரு 
சில புடவைகளில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த சிகப்பு கலர் புடவையை 
உடுத்துக்கொண்டு ரொம்ப சந்தோசமா ஆப்பிசுக்கு வந்தேன். 
அவ்வளோதான்!!!
 
எங்க ஆப்பிசுல இருக்க ஒரு பக்கி பய "அய்யயோ காஞ்சனா " அப்படின்னு 
அலற ஆப்பிசே விழுந்து விழுந்து சிரிச்சத பார்த்து எனக்கு மூஞ்சி சுருங்கி 
போச்சு. அழுகையே வந்துடுச்சு. சரி என்ன பண்றது மனச தேத்திக்கன்னு 
எனக்கு நானே சமாதானம் சொல்லிகிட்டேன்.
ஆனா வெந்த புண்ணுல வேலை பாயச்சுரதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் 
இன்னிக்கு தான் அனுபவிச்சேன். ஒருத்தன் வந்து சொல்றான் "என்னங்க 
உங்கள பாத்தா ஒரே சிரிப்பு சிரிப்பா வருதுங்க. மாரியாத்தா மாதிரியே 
இருக்கீங்க" (நா கேட்டேனா உன்கிட்ட ) அப்படின்னு சொலிட்டு போய்டான். 
மனசு ஒடஞ்சு போச்சு எனக்கு. 


இந்த லட்சனுத்துல இன்னொருத்தன் கேக்குறான் "என்னங்க ஏதும் 
விசேசமா வீட்டுல? உங்கள பொண்ணு பாக்க வர்றாங்களோ?" (அய்யயோ 
இன்னிக்கு இது போதும்ங்க :( .. ) எவ்வளவு நேரம் தான் நானும் 
சிரிச்சுகிட்டே இருக்கற மாதிரி நடிக்கறது. வேற என்னங்க பண்ண முடியும்? 
அழவா முடியும்? படக்குன்னு எழுந்தது மாடியில இருக்க அக்கா வீட்டுக்கு 
போய் என்ன கோவம் ஆத்திரம் எல்லாம் கொட்டி தீர்த்துட்டேன். 

என்னதான் அதுக்கப்புறம் எவளவோ பேரு "என்ன சாரீ இன்னிக்கு? அழகா 
இருக்கீங்களே. உங்களுக்கு சாரீ நல்லா இருக்கு" அப்படின்னு சொன்னாலும் 
காலைல வாங்கின பல்பு தான் இன்னும் மனசுள்ள பதிஞ்சு ரணகள 
படுத்திக்கிட்டே இருக்கு :(

No comments: